×
 

சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை உட்பட 21 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநாகர் சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று (07.08.2026) இரவு 7:00 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அவசர வானிலை அறிக்கையின்படி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாகச் சில இடங்களில் சாலைகளில் நீர் தேங்கவும், வழுக்கும் தன்மை ஏற்படவும் வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 மழை மற்றும் இடி மின்னல் ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள் மற்றும் உலோக அமைப்புகளின் அருகிலோ தஞ்சமடைவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னையின் முக்கியப் பகுதிகளில் மாலை வேளையில் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவி வரும் நிலையில், திடீர் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share