அடக்கொடுமையே...!! தனித்தீவாக மாறிய ராமேஸ்வரம்... இடுப்பளவுக்கு தேங்கிய மழைநீர்... படகுகளை பயன்படுத்தும் மக்கள்...!
ராமேஸ்வரத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
டிட்வா புயல் காரணமாக தங்கச்சி மடத்தில் 22 செ. மீ பெய்த கனமழையின் காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மீனவ குடும்பம் அவதி வீடுகளை சுற்றி இடுப்பளவு தண்ணீர் நிற்பதால் சிறிய மிதவை படகுமூலம் வீட்டிற்கு செல்லும் அவல நிலைக்கு மீனவர்கள் சென்றுள்ளனர்.
டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வந்தது. இதில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. தங்கச்சிமடம் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் 22 சென்டிமீட்டர் பெய்த கனமழை காரணமாக ராஜா நகர், ராஜீவ் காந்தி நகர், ஐயன் தோப்பு உள்ளிட்ட மூன்று பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழும் வீடுகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
மேலும் மழைநீர் இடுப்பு அளவிற்கு தேங்கி நிற்பதன் காரணமாக வீட்டிற்கு நடந்து செல்ல முடியாமல் சிறிய போயா படகுமூலம் செல்கின்றனர். மேலும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதி அடைந்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தங்கச்சிமடம் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட் கொடுத்த புயல்...!! - இந்த 5 மாவட்ட மக்களே உஷார்... வானிலை மையம் கொடுத்த அப்டேட்...!
மழை நின்று இரண்டு நாட்களாகியும் ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் குளம் போல் தேங்கி கிடப்பதினால் வீட்டிற்குள் தங்கியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து பள்ளிவாசல் தெரு பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING வேதாரண்யத்தை நெருங்கும் டிட்வா... நள்ளிரவு முதல் நாளை மாலை வரை காத்திருக்கும் தரமான சம்பவம்...!