3 நாள் டைம்..! காவல்துறைக்கு கெடு.. தெய்வச்செயல் பிரச்சனையில் தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம்..!
திமுக பிரமுகராக இருந்த தெய்வச் செயல் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரில் பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
திமுக பிரமுகர் தெய்வச் செயல் என்பவர் கட்சியின் பெயரை பயன்படுத்தி பல பெண்களை குறி வைத்து ஏமாற்றி வருவதாகவும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும் இளம் பெண் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். அவர் மீது பல அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்த அவர், தன்னை அன்பில் மகேஷ் பொய்யாமொழி யின் பிஏவுக்கு இறையாக்க நினைத்ததாகவும் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தான் மறைமுகமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் தற்கொலை செய்து கொள்வேனோ என்ற பயம் ஏற்பட்டுள்ளதாகவும் தன்னை குற்றவாளி போல் நடத்துவதாகவும் அந்தப் பெண் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டுள்ள தெய்வச் செயலை கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: என்னை குற்றவாளி போல நடத்துறாங்க... தற்கொலை பண்ணிப்பேன்! கதறும் இளம்பெண்!
இந்த நிலையில் இளம் பெண் அளித்த புகார் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளது. திமுக பிரமுகர் தெய்வச் செயல் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன என தேசிய மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
மூன்று நாட்களுக்குள் எஃப். ஐ. ஆர். நகலுடன் எடுக்கப்பட்ட விசாரணை தொடர்பாக அறிக்கை அளிக்க காவல்துறைக்கு மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தெய்வச் செயலுக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதால் பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணையை உறுதி செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பூதாகரமாக வெடிக்கும் பாலியல் சம்பவம்! தெய்வ சாயலை கட்சி பொறுப்பில் இருந்து விடுத்த திமுக