தாக்குவது நியாயமா..? போராடிய மாணவர்கள்... தடியடி நடத்திய போலீஸ்..! சுப்ரீம்கோர்ட் கண்டனம்..!!
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கட்டணம் தெரிவித்துள்ளது.
NEET-UG 2026 தேர்வில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பேப்பர் லீக் மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) சீர்திருத்தங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் பல நாட்களாக டெல்லியின் ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். “சன்சத் சலோ” என்ற பெயரில் ஜூலை 20 அன்று நடைபெற்ற பேரணியின்போது போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி நகர முயன்றதால், டெல்லி போலீசார் தடியடி, கண்ணீர்புகை குண்டுகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இதில் பல மாணவர்கள் காயமடைந்ததாகவும், பெண் மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகின. உச்சநீதிமன்றம் டெல்லி மற்றும் பீகார் உள்ளிட்ட இடங்களில் NEET தேர்வு பேப்பர் லீக் மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்களின்போது போலீசார் நடத்திய தாக்குதல், தடியடி மற்றும் அதிகப்படியான பலப் பிரயோகம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குகள் அனைத்தும் தொடர்ச்சியான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இந்த விஷயத்தில் முக்கியமான கருத்துக்களை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் அமைதியான போராட்ட உரிமை அரசியல் சாசனத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: "ஒரு பதில் கூட இல்லை"..! மத்திய அரசை விளாசிய சுப்ரீம் கோர்ட்..! முக்கிய உத்தரவு..!!
“போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை நியாயப்படுத்த முடியாது. காவலர்கள் உள்பட அனைவரின் வாழ்க்கையும் முக்கியமானதுதான்” என அவர் தெரிவித்தார். மேலும், அமைதியான போராட்டத்துக்கு எதிராக அதிகப்படியான பலப் பிரயோகம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான நெறிமுறைகள் (uniform protocol) இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: நவோதயாவுக்கு NO..! தமிழ்நாட்டுக்கு என்ன பிரச்சனை..? 3 வாரம் கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்..!