வெடிக்கும் நீட் பிரச்சனை... போராட்டக் களத்தில் குதித்த காங்கிரஸ்... ஸ்தம்பிக்கும் டெல்லி..!!
டெல்லியில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு பெரிய அளவிலான இளைஞர் எழுச்சியாக உருவெடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டு நீட் தேர்வில் ஏற்பட்ட கேள்விப்பட்டியல் கசிவு மற்றும் பிற தேர்வு ஒழுங்கீனங்கள் தொடர்பாக ஏற்பட்ட கோபம் இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஜூன் 6ஆம் தேதியிலிருந்து ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்த அமைதியான போராட்டம், பின்னர் பெரிய அளவிலான மோதல்களுடன் தொடர்கிறது.
இந்தப் போராட்டத்தை முதன்மையாகத் தொடங்கியது 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற இளைஞர் அமைப்பு. டிஜிட்டல் தகவல் தொடர்பு வியூக நிபுணர் அபிஜீத் திப்கே இதைத் தொடங்கினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒரு கருத்து இந்த அமைப்பின் பெயருக்கும், சமூக ஊடகத்தில் பரவலான ஆதரவுக்கும் காரணமாக அமைந்தது. இந்த அமைப்பு விரைவில் தேர்வு சீர்திருத்தங்கள், கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கோரி போராட்டங்களுக்கு மாறியது.
ஜூன் 28ஆம் தேதி லடாக் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் இந்தப் போராட்டத்தில் இணைந்து காலவரையற்ற பட்டினி போராட்டத்தைத் தொடங்கினார். இது போராட்டத்திற்கு பெரும் ஊக்கத்தை அளித்தது. மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பல்வேறு அமைப்புகள் என பல தரப்பினரும் இணைந்தனர். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், பிரதமர் மோடி மீதும் பொறுப்பு சுமத்தப்பட வேண்டும், தேர்வு அமைப்பில் முழுமையான சீர்திருத்தங்கள், இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: தமிழகம் வரும் ராகுல்காந்தி! தமிழக காங்கிரசில் அதிரடி மாற்றம்! 77 புதிய மாவட்ட தலைவர்களுக்கு சிறப்பு பயிற்சி!
ஜூலை மாதத்தில் போராட்டம் தீவிரமடைந்தது. ஜூலை 18ஆம் தேதி போலீஸார் சோனம் வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது போராட்டக்காரர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அபிஜீத் திப்கே உள்ளிட்டோர் புதிய பட்டினி போராட்டத்தைத் தொடங்கினர். நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஜந்தர் மந்தரில் திரண்டு பாராளுமன்ற நோக்கி ஊர்வலம் நடத்த முயன்றனர். மழை பொழியும் வானிலையிலும், போலீஸ் தடுப்புகளையும் மீறி ஆயிரக்கணக்கானோர் கூடினர். போராட்டம் வன்முறையாக மாறியது. போலீஸார் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர், தடியடி நடத்தினர்.
இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் இல்லம் நோக்கி பேரணையாக செல்ல காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். சாலையில் அமர்ந்து காங்கிரஸ் ஆர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் டி கே சிவகுமார் உள்ளிட்டூரும் மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். போராட்டக் களமாக மாறி உள்ள டெல்லியில் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விஸ்வரூபம்? பிரதமர் மோடிக்கு ராகுல்-கார்கே கூட்டாக கடிதம்!