×
 

REELS எடுக்கத் தடை... கறார் காட்டிய டெல்லி மெட்ரோ நிர்வாகம்...!

டெல்லி மெட்ரோ ரயில்களில் ரீல்ஸ் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில், இந்தியாவின் தலைநகரமான புது டெல்லியின் போக்குவரத்து முறையில் ஒரு மாபெரும் புரட்சியாக விளங்குகிறது. 2002ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி முதல் பயணிகள் சேவையைத் தொடங்கிய இந்த மெட்ரோ அமைப்பு, இன்று உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் திறமையான மெட்ரோ நெட்வொர்க்குகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வாழும் மக்களுக்கு, இது வெறும் போக்குவரத்து சேவை மட்டுமல்ல, மாறாக அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில், இந்தியாவின் மிகவும் அனைத்தும் பரபரமான பொது போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் போது, இன்று சமூக ஊடகங்களின் தாக்கத்தில் ஒரு புதிய சவாலை எதிர்கொள்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக, இளைஞர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் பிற சமூக ஊடக உள்ளடக்கங்களை உருவாக்குவதற்காக மெட்ரோ கோச்சிகளையும் நிலையங்களையும் ஷூட்டிங் ஸ்டூடியோக்கள் ஆக மாற்றியது பொதுமக்களுக்கு பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் சக பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அசௌகரியமாக உணரும் சூழல் ஏற்படுகிறது. இதற்கு எதிராக, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

இதையும் படிங்க: ரீல்ஸ் மோகத்தால் ஒரே நொடியில் பலியான 4 உயிர்கள்... நடுங்க விடும் கோரம்...!

டெல்லி மெட்ரோ ரயில்களில் ரீல்ஸ் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில்களுக்குள் உணவு அருந்துவது, கீழே உட்காருவது ஆகியவற்றை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகளை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மெட்ரோ ரயிலில் பாம் வெச்சிருக்கேன்.. மிரட்டல் விடுத்த 17 வயது சிறுவன் கைது..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share