ரீல்ஸ் மோகத்தால் ஒரே நொடியில் பலியான 4 உயிர்கள்... நடுங்க விடும் கோரம்...!
உத்தர பிரதேசத்தில் ரீல்ஸ் எடுக்க ஒரே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நான்கு பேர் எதிரே வந்த கார் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் இருக்கும் குல்ஷேரா கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ரீல்ஸ் எடுக்க புஷ்தா சாலை ஒற்றை வழித்தடத்தில் சென்றபோது எதிர்திசையில் வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நான்கு இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
விசாரணையில் இறந்தவர்கள் 15 வயதான லவ்குஷ், 16 வயதான சுமித், 17 வயதான ரிஹான் மற்றும் 19 வயதான மோனு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த ஓட்டுனரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த 4 இளைஞர்களும் பிரதான சாலையில் ஹெல்மேட் அணியாமல் விதவிதமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக பல வீடியோக்களை எடுத்துள்ளனர். அதன் பின்னர் பிற்பகலில் வீடு திரும்புவதற்காக ஒரே பைக்கில் 4 பேரும் புறப்பட்டப்போது தான், எதிரே வந்த வேகன்ஆர் கார் மோதி 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 4 பேருக்கும் முகம், தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அளவில்லாம போச்சு.. வன்முறையை தூண்டும் ரீல்ஸ்! INSTA உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்ப முடிவு..!
சுமித்தும் லவ்குஷும் குலேஸ்ராவில் உள்ள சஞ்சய் விஹார் காலனியிலும், ரெஹான் ஹல்தவுனியிலும், மோனு கிரேட்டர் நொய்டாவின் சுதியானா கிராமத்திலும் வசித்து வந்தனர்.
இதையும் படிங்க: இனி திருப்பதியில் இதை செய்தால் கடும் நடவடிக்கை பாயும் - தேவஸ்தானம் எச்சரிக்கை...!