10 மணிக்கு மேல டாஸ்மாக் திறந்திருந்தால் போலீஸ் மீது நடவடிக்கை! எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களுக்கு டிஜிபி சந்தீப்ராய் ரத்தோட் வார்னிங்!
'டாஸ்மாக் கடைகள், இரவு 10:05 மணிக்கு திறந்திருந்தால், அதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளான, எஸ்.ஐ., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: மதுவுக்கு எதிரான கட்டுப்பாட்டை கடுமையாக அமல்படுத்தும் விதமாக, டாஸ்மாக் கடைகள் இரவு 10:05 மணிக்கு மேல் திறந்திருந்தால், அந்தப் பகுதிக்கு பொறுப்பான எஸ்.ஐ. மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் குடி மையங்கள் மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் பல இடங்களில் குறித்த நேரத்தில் கடைகள் மூடப்படுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகும் அபாயம் இருப்பதால், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே டாஸ்மாக் கடைகள் முன்பு சென்று இடம், தேதி, நேரத்துடன் செல்பி எடுத்து அனுப்புமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மண்டல ஐ.ஜி.க்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோட் புதிய கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING போட்டுறா வெடிய... டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட்நியூஸ்... விடிந்ததுமே அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்...!
அந்த உத்தரவில், “டாஸ்மாக் கடைகள் அல்லது குடி மையங்கள் இரவு 10:05 மணிக்கு திறந்திருந்தால், அந்தப் பகுதியின் கண்காணிப்புப் பொறுப்பில் உள்ள எஸ்.ஐ. மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் சட்ட விரோத மது விற்பனை நடைபெற்றால், அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கடுமையான நடவடிக்கை மூலம், டாஸ்மாக் கடைகளின் நேர ஒழுங்கை கட்டுப்படுத்தி, மக்கள் மத்தியில் மது அருந்தும் பழக்கத்தைக் குறைக்கவும், இரவு நேர சட்ட ஒழுங்கை உறுதி செய்யவும் அரசு முயற்சி எடுப்பதாகக் கருதப்படுகிறது.
போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “மக்களின் பாதுகாப்பும், சமூக ஒழுங்கும் முக்கியம். எனவே குறித்த நேரத்தில் கடைகள் மூடப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி டாஸ்மாக் கடைகளின் நேர ஒழுங்கு முறையாக பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!