#BREAKING போட்டுறா வெடிய... டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட்நியூஸ்... விடிந்ததுமே அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்...!
தமிழ்நாட்டில் மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேறு கடைகளில் பணி வழங்க உத்தரவு.
தமிழக முதல்வராக பொறுபேற்ற விஜய் கடந்த 12 ஆம் தமிழகத்தில் கோவில்கள், கல்வி நிலையங்கள் அருகே இருக்கும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் 2 வாரங்களுக்குள் மூடப்படும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து முதல்கட்டமாக 500-க்கு மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து மதுக்கடைகளை மூடும் பணிகளானது நடந்து வருகிறது இந்த நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றமும் பாராட்டு தெரிவித்துள்ளது. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆன்மீக வழிபாட்டாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களை, பணி மூப்பு அடிப்படையில் மற்ற கடைகளுக்கும், கிடங்குகளுக்கும் இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்குறிப்பிட்ட அரசாணையின்படி மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த கடைப்பணியாளர்களை பணிமூப்பு அடிப்படையில் பட்டியல் தயார் செய்து, மூடப்பட்ட கடைகளுக்கு அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை கூடுதல் ஏற்படும் மதுபான கடைகளில் மூடப்பட்ட கடைப்பணியாளர்களை பணிமூப்பின் அடிப்படையில் பணிநிரவல் செய்யப்படவேண்டும்.
இதையும் படிங்க: முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!
மேலும், மூடப்பட்ட கடைப்பணியாளர்களில் எஞ்சிய பணியாளர்களை காலி பணியிடம் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிநிரவல் செய்திடவும், மீதமுள்ள பணியாளர்கள் கையிருப்பில் இருந்தால் அப்பணியாளர்களை கிடங்கு பணிகளிலும் மாவட்ட அலுவலக பணிகளிலும் இப்பணியாளர்களை பணிநிரவல் செய்திட அனைத்து மாவட்ட மேலாளர்களை அறிவுறுத்தப்படுகிறார்கள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!