×
 

அப்பளம் போல் நொறுங்கிய லாரி, பைக், கார்... தொப்பூர் கோர விபத்திற்கு காரணம் இதுவா? - ஓட்டுநர் பகீர் வாக்குமூலம்...!

தொப்பூர் அருகே 2 லாரி, 2 கார், பைக்  மோதிய விபத்தில், நான்கு பேர் உயிரிழப்பு-லாரியில் பிரேக் இல்லாததால், விபத்து என காயமடைந்த லாரி ஓட்டுநர் தகவல்.

மகாராஷ்டிராவிலிருந்து கோழி பண்ணைக்கான தீவனம் ஏற்றிக் கொண்டு நாமக்கல் நோக்கி வந்துள்ளனர். இதில் லாரியை முனியப்பன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவருடன் மாற்று ஓட்டுநராக வீரா வந்துள்ளனர். இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தருமபுரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி சென்ற லாரியில் திடீரென பிரேக் பிடிக்காததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற லாரி மீது மோதியுள்ளது. அந்த லாரில்  இருசக்கர வாகனம், ஆம்னி வேன், கார் மீது மோதிய விபத்துக்குள்ளானது.

இந்த கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற தம்மணம்பட்டியை சேர்ந்த அருணகிரி, அவருடைய அக்கா கலையரசி, மற்றும் தினேஷ் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் முனியப்பன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்தில் காயம் அடைந்த லாரி ஓட்டுநர் வீரா உள்ளிட்ட 3 பேரை காவல் துறையினர் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்தால் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்து நடந்த இடத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆர்.சதீஷ் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து சேலம் தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: தெருவுக்கு தெரு டாஸ்மாக்..! ACCIDENT-ல் நம்பர்.1 தமிழ்நாடு... ஆனா இந்த திமுக இருக்கே... விளாசிய அண்ணாமலை...!

இந்த நிலையில் விபத்துக்குள்ளான லாரி பிரேக் குறைவாக இருந்ததாகவும், லாரி உரிமையாளரிடம் சொன்னபோது, சரிசெய்யப்பட்டுள்ளது. மாகாராஸ்டிரா போயிட்டு வந்ததும், புதியதாக மாற்றித் தருவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தொப்பூர் பகுதியில் லாரியில் பிடிக்காததால், ஓட்டுநர் முனியப்பன், லாரியை கட்டுப்படுத்த எவ்வளவு முயற்சி எடுத்தும் முடியவில்லை. அதனால் முன்னால் சென்ற பார்சல் லாரி மீது மோதியது. நான் லாரியில் சிக்கி கொண்டதால், நுலிழையில் உயிர் தப்பினேன் என விபத்தில் தப்பிய லாரியின் மாற்று ஓட்டுநர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிகாலையிலேயே பயங்கரம்... அலறிய ஐயப்ப பக்தர்கள்... 3 பேர் துடிதுடித்து பலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share