×
 

மும்மொழிக் கொள்கை: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்.. ரியாக்ட் செய்த தர்மேந்திர பிரதான்..!!

அனைத்து இந்திய மொழிகளையும் வலுப்படுத்தும் தேசிய முயற்சியில் இணைவது அவசியம் என தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

2026-27 கல்வியாண்டு முதல் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தப் போவதாக மத்திய அரசின் கல்வி வாரியமான சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த முயற்சியை “இந்தி திணிப்பு” என்று விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின், “தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என்பதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமூக வலைத்தளமான எக்ஸ் (முன்பு ட்விட்டர்) இல் விரிவான பதில் அளித்துள்ளார். அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதிவில், “அரசியல் தோல்விகளை மறைக்க ‘இந்தி திணிப்பு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சலிப்பூட்டுகிறது. தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என்பதா?” என்று கூறி, முதலமைச்சரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.

மேலும் அவர், “கூடுதல் மொழிகளை கற்றுக்கொள்வதால் தமிழ் பலவீனமடைவதில்லை. மாறாக, அதைப் பேசுபவர்கள் தன்னம்பிக்கையுடன் வளர்வார்கள்” என்று வலியுறுத்தினார். புதிய கல்விக் கொள்கை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து, அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பதாகவும், அனைத்து இந்திய மொழிகளையும் வலுப்படுத்தும் தேசிய முயற்சியில் அனைவரும் இணைய வேண்டும் என்றும் அமைச்சர் பிரதான் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டி அடித்த மக்கள்... வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆவேசம்..!!

மத்திய அரசின் இந்த மும்மொழிக் கொள்கை அமலாக்கம் தொடர்பான விவாதம் தமிழ்நாட்டில் அரசியல் வெப்பத்தை அதிகரித்துள்ளது. மாநில அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அமைச்சரின் பதில் மேலும் விவாதங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வேட்பாளர் பட்டியலில் பேரு இல்லனா என்ன..?? இதுவே எனக்கு சந்தோஷம் தான்..!! அண்ணாமலை நச் பதில்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share