×
 

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆகம விதி மீறலா?... வாட்ஸ் அப்பில் வட்டமடிக்கும் வீடியோவால் பரபரப்பு...!

உயர் அதிகாரிக்கு நடை சாத்திய பின்னர் சாமி தரிசனம் செய்ய வைத்ததாக சிவனடியார் வெளியிட்ட வீடியோ வாட்ஸ் அப்பில் வட்டமடிப்பதனால் இந்து அமைப்பினர் கண்டனம் 

கோவை பேரூரில் அமைந்து உள்ளது பட்டீஸ்வரர் கோவில், தமிழகத்தின் மிகத் தொன்மையான மற்றும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் மாமன்னன் கரிகால சோழனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், அதன் வரலாற்றுச் சிறப்புக்குச் சான்றாக விளங்குகிறது. சைவ சமயத்தின் முக்கிய அடியார்களான அருணகிரிநாதர் மற்றும் கச்சப்ப முனிவர் போன்றோரால் பாடப்பட்ட பெருமை இக்கோவிலுக்கு உண்டு. இங்கு உள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள் மற்றும் கட்டிடக்கலை அம்சங்கள் சோழர் கால கலை நுணுக்கத்தைப் பறைசாற்றுகின்றன. இக்கோவிலின் பிரதான தெய்வங்களான பட்டீஸ்வரரும் மற்றும் பச்சை நாயகி அம்மனும், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.


அண்மையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் இங்கு வந்து சாமி தரிசனம் செய்தார். மேலும், நடிகர் சூர்யா, நகைச் சுவை நடிகர் யோகி பாபு, நடிகை சினேகா போன்ற திரைப் பிரபலங்களும் இக்கோவிலின் வரலாற்றுச் சிறப்பம்சங்களை அறிந்து, பக்தி சிரத்தையுடன் இங்கு வந்து தரிசித்துச் சென்று உள்ளனர்.

இந்நிலையில் கோவிலின் தரிசன நேரம் முடிந்து பூஜைகள் முடிந்த பிறகு கதவுகளை சாற்றி பின்னர் மறுநாள் காலை பூஜைக்கு பின்னர் கதவுகள் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இரவு பக்தர்கள் அனைவரும் சென்ற பிறகு கோவில் பூஜைகள் முடிந்து கருவறை மூடப்பட்டது. பின்னர் நடை சாத்தப்பட்டு இருந்தது. அப்பொழுது அங்கு ஒரு வி.ஐ.பி சென்று உள்ளார். சாத்தப்பட்ட கதவுகளை பாதி திறந்த நிலையில், உள்ளே சென்று பூட்டப்பட்ட கருவறை திறந்து மீண்டும் அவர் மட்டும் அங்கு சாமி தரிசனம் செய்து உள்ளார்.

இதையும் படிங்க: முதல்வர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்த சீமான்... பின்னணி குறித்து வெளியான 2 பரபரப்பு காரணங்கள்...!

இதனை பார்த்த அங்கு இருந்த நபர் ஒருவர் உள்ளே சென்று, கருவறையை பூட்டிய பிறகு  எப்படி அவருக்கு மட்டும் அனுமதி அளித்து சாமி தரிசனம் செய்ய வைப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார். அவர் யாராக ? இருந்தாலும் பூட்டிய நடையை எதற்கு திறந்தீர்கள் ? உள்ளே எப்படி  அனுமதித்தீர்கள்?, நாள்தோறும் வரும் பக்தர்கள் யாராவது வந்தால் அனுமதிப்பீர்களா ?  யார் அவர் ? எந்த அதிகாரியாக இருந்தாலும் சாமியிடம் என்ன அதிகாரி ? இது என்ன விதி ? கோயில் சாத்திய பிறகு உங்களுக்கு யார் ?  அனுமதி கொடுத்தார் என கேள்வி எழுப்பினார். 

அதனை அவர் செல்போனில் பதிவு செய்தார். தற்பொழுது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கோயில் ஆகவிதிகள் மீறப்பட்டதா என கேள்விகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், இந்து அமைப்பினர் இந்த சம்பத்தை கண்டித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: டெண்டர் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய பொதுப்பணித்துறை அலுவலர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share