டெண்டர் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய பொதுப்பணித்துறை அலுவலர்...!
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் முதுநிலை வரைவு அலுவலர் ரவி, காண்டிராக்டர் சண்முகத்திடம் ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளார் .
சேலம் அருகே உள்ள ஜாரி கொண்டலாம்பட்டி , அரசு மேல்நிலை பள்ளியில் மின் சாதனங்கள் பொருத்த ஒப்பந்த்தாரர் , சண்முகம் டெண்டர் எடுத்திருந்தார். இதற்கு அனுமதி தர சேலம் காந்திரோடு பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் டெண்டர் போட்டிருந்தார். இதற்கு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் முதுநிலை வரைவு அலுவலர் ரவி,
காண்டிராக்டர் சண்முகத்திடம் ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளார் .
இந்த லஞ்சப் பணத்தை தர விரும்பாத ஒப்பந்ததாரர் சண்முகம் , இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் தெரிவித்தப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் ஒரு லட்சம் பணத்தை காண்டிராக்டர் சண்முகம் இன்று மூன்று மணி அளவில் , மற்றொரு ஒப்பந்ததாரர் பிரகாஷ் மூலமாக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்த முதுநிலை வரைவு அலுவலர் ரவியிடம் வழங்கினார் .
அப்போது மறைந்து இருந்த சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் நரேந்திரன் மற்றும் போலீசார் முதுநிலை வரைவு அலுவலர் ரவியையும் , பிரகாஷ் என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.லஞ்சப்பணம் ரூபாய் ஒரு லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இதுக்கு இல்லையா ஒரு எண்டு... ஒரே நாளில் 17 பேர்... அச்சத்தில் அலறும் விழுப்புரம்...!
இதையும் படிங்க: புதுப்பிக்கப்பட்டது சரவண பொய்கை... திருச்செந்தூரில் தெய்வானைக்கு பிரம்மாண்டமான புது வீடு ரெடி...!