திடீர் ட்விஸ்ட் கொடுத்த புயல்...!! - இந்த 5 மாவட்ட மக்களே உஷார்... வானிலை மையம் கொடுத்த அப்டேட்...!
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் நாளை காலை 8 மணி வரை மிக கன மழை தொடரும் என வானிலைஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
டிட்வா புயல் நேற்று மாலை 5:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில இன்று காலை 5:30 மணி நிலவரப்படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகில் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது 12 மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் வெறும் 50 கிலோமீட்டர் என்ற தொலைவில் தான் மையம் கொண்டிருக்கிறது. மேலும் இன்னும் அது மெதுவாக நகர்ந்து 40 கிலோமீட்டர் என்ற நெருக்கத்திற்கு வரக்கூடும் எனவும், அடுத்த 12 மணி நேரங்களில் மாலை நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 30 கிலோமீட்டர் நெருக்கத்தில் வரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலத்தால் உருவாகக்கூடிய மழை மேகக்கூட்டங்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் மீது தொடர்ச்சியாக அடுத்தடுத்து வருவதன் காரணமாக சாரல் மழை போல் விடாது தொடர்ந்து மழை பெய்யக்கூடிய வாய்ப்பு நீடிப்பதாகவும், இந்த மழையினுடைய அளவு நாளை காலை எட்டரை மணி அளவு தொடரக்கூடிய வாய்ப்பு இருப்பதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 50 கி.மீ. தூரம்... 12 கி.மீ. வேகம்... டார்க்கெட்டை நெருங்கும் 'டிட்வா'... தப்புமா சென்னை?
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை எட்டரை மணி வரை தொடர்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் மேலும் மாலை 5ரை மணி அளவில் இது காற்ற தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு நெருக்கத்தில் வருவதனால் இரவு நேரங்களிலும் இது போன்று மழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: மெரீனாவுக்கு போகாதீங்க..!! கொந்தளிக்கும் கடல் அலைகள்.. வீசும் சூறாவளிக்காற்று..!! மக்களுக்கு வார்னிங்..!!