×
 

ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக கூறியது முழுக்க முழுக்க உண்மை.! ரகசியத்தை போட்டுடைத்த எல்.கே.சுதீஷ்..!

ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக கூறியது உண்மை., அதனை நேரம் வரும்போது வெளிப்படுத்துவோம் என தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.

திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளைப் போல தேமுதிகவும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றது. அதன் முன்னோட்டமாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை கட்சியின் இளைஞரணி செயலாளராக தேமுதிக பொதுக்குழு அங்கீகரித்தது. மேலும் கட்சியின் பொருளாளராக எல்கே சுதீஷ் தேர்வு செய்யப்பட்டார்.

விஜய பிரபாகரனுக்கு பொறுப்பு கொடுத்தது கட்சியில் உள்ளவர்களாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பது தெரிகிறது. தேமுதிகவின் மூத்த நிர்வாகிகள் விஜயபிரபாகரனுக்கு இளைஞர் அணி பதவி கொடுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ளனர். அது மட்டுமல்லாது நீண்ட நாட்களாக கட்சியில் உள்ளவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத போது விஜய பிரபாகரனுக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு கொடுத்து இருப்பது அதிருப்தியையும் வருத்தத்தையும் அளிப்பதாக பிரேமலதாவிற்கு கடிதம் எழுதி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: மூச்சு உள்ளவரை இதை செய்யமாட்டேன்... தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ பரபரப்பு வீடியோ!!

இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் அதிமுகவுடன் தங்களது கூட்டணி தொடர்பாகவும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த விவகாரம் தொடர்பாகவும் பேசியுள்ளார். ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளதாகவும், அதில் யாருடன் தேமுதிக கூட்டணி வைக்கப் போகிறது என்பதை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முறைப்படி அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார். தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக அதிமுக கூறியது முழுக்க முழுக்க உண்மை என்றும் நேரம் வரும் போது இது குறித்து வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

அப்படி யாருக்கும் எந்த உத்தரவாதமும் தரவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த சுதீஷ், அதிமுக அளித்த உத்தரவாதத்தால் தான் 2024 மக்களவை தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும் அதிமுக கொடுத்த உத்தரவாதத்தால் தான் அந்த கூட்டணியில் அங்கம் வகித்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும், 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசித்து வருவதாகவும் எல்கே சுதீஷ் கூறியுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறுவதில் எங்களுக்கும் விருப்பம் உண்டு என்றும் உகந்த வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பற்றி கண்டிப்பாகப் பேசுவோம். அதற்கான தகுதியும் எங்கள் கட்சிக்கு உள்ளது எனவும் குறிப்பிட்டார். 

இதையும் படிங்க: கேப்டன் மகனுக்கு பதவி... தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. எடுத்த அதிரடி முடிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share