ஒரே மாதத்தில் 2 போதை ஊசி மரணங்கள்..! அமைச்சர் சரத் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? வலுக்கும் கண்டனம்..!!
ஒரே மாதத்தில் இரண்டு போதை ஊசி மரணங்கள் நிகழ்ந்து இருப்பதாக திமுக விமர்சனம் செய்துள்ளது.
ஒரே மாதத்தில் இரண்டு போதை ஊசி மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் திமுக தெரிவித்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் மரணம் அடைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம்பெண் ஒருவர் மரணமடைந்தார் என்ற நிகழ்வையும் திமுக சுட்டிக் காட்டி இருக்கிறது.
ஒரு மாத்திற்குள் இரண்டு போதை ஊசி மரணங்கள் நடந்திருப்பதாகவும் இளைஞர்கள் இடையே போதை ஊசி புழக்கம் இந்த ஒருமாதத்தில் அதிகரித்துள்ளதை இந்த சம்பவங்கள் உறுதி செய்வதாகவும் தெரிவித்து உள்ளது.
ஒருபக்கம் போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக மராத்தான் ஓடி விளம்பரம் செய்யும் முதல்வர் விஜய், போதை பொருளை பயன்படுத்தியது போல thug life reels வெளியிட்டு போதை பொருளுக்கு Promotion செய்த அமைச்சர் சரத்குமார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன் என கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: அநியாயமா ரெண்டு உசுரு போச்சே..! 6 மாசம் கம்முனு இருக்கணுமா CM..? விளாசிய திமுக..!!
திரைப்படங்களில் போதை பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பாட்டு பாடி இளைஞர்களை தவறாக வழிநடத்தியது போல இப்போது இப்படி மறைமுகமாக பொது வெளியில் போதை பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறாரா என சரமாரி கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை இளைஞர்கள் போதை ஊசியால் மரணமடைய வேண்டும் என்றும் எப்போது தான் மக்கள் பிரச்சினைகள் பற்றி வாய் திறக்க போறீங்க cm sir.? எனவும் கேள்வி எழுப்பு இருக்கிறது.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!