அநியாயமா ரெண்டு உசுரு போச்சே..! 6 மாசம் கம்முனு இருக்கணுமா CM..? விளாசிய திமுக..!!
மயிலாடுதுறையில் காதல் ஜோடி தூக்கிலிட்ட நிலையில் இருந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக கண்டித்து உள்ளது.
ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக திமுக கண்டித்து உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும், 16 வயது பெண்ணும் காதலித்த விவகாரத்தில், வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இளைஞரும் அந்தப் பெண்ணும் ஒரு குடிசையில் தூக்கில் தொங்கும் காட்சிகளைப் பார்த்து தமிழ்நாடே பதைபதைக்கிறது என்று கூறியுள்ளது.
இந்த மர்ம மரணங்கள் குறித்து பல சந்தேகக் கேள்விகள் எழுந்திருப்பதுடன், சிங்கப்பெண் என்கிற ஸ்டிக்கர் திட்டத்தின் ஆட்சியில், +2 படிக்கும் பெண்ணின் உயிருக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதை உணர முடிகிறது என்றும் இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே, வீடுகளை இடிக்கும் காட்சிகளைப் பார்த்து வந்த நாம், தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், இரு குடும்பத்தார் பிரச்சினையில் வீடுகளும் வாகனங்களும் நொறுக்கப்படும் புதிய அபாயமும் அரங்கேறியுள்ளது எனவும் குறிப்பிட்டு உள்ளது.
சினிமாவில் மட்டுமே வரக்கூடிய கொடூரமான வில்லத்தனக் காட்சிகளை தமிழ்நாடு நிஜத்தில் அனுபவிக்கத் தொடங்கியுள்ளதாகவும் இத்தனைக் கொடூரங்களும் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே அரங்கேறி இருப்பது சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருப்பதையே காட்டுகிறது என்றும் கூறியுள்ளது. குதிரை பேரத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சோபா மாடல் அரசின் முதலமைச்சர், தன் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கின் மீது இனியாவது கவனம் செலுத்துவாரா? என திமுக சாடியது.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!
திமுக இதைக்கூட விமர்சிக்காமல் கேள்வி கேட்காமல் 6 மாதம் பொறுத்திருந்தால், அநியாயமாகப் பறிபோன இரண்டு உயிர்களைத் திருப்பிக் கொடுத்து விடுவாரா ரீல்ஸ் முதலமைச்சர் என்று சாடியுள்ளது.
இதையும் படிங்க: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு!! கரெக்டா இருந்துக்கோங்க! கூட்டணி கட்சிகளிடம் பாய்ந்த CM விஜய்!!