×
 

50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கணும்..! அண்ணா நகர் வேட்பாளருக்கு உதயநிதி வாக்கு சேகரிப்பு..!!

அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் சிற்றரசுவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

சென்னை அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நே. சிற்றரசு தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பணிகள் குழு தலைவராகவும், 110வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட சிற்றரசு, உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய தளபதியாகக் கருதப்படுபவர்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அவர் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை நேரடியாக அணுகி, திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து வருகிறார். சிற்றரசு ஏப்ரல் 6 அன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது.

அதன் பின்னர் அவரது பிரச்சாரம் தீவிரமடைந்தது. காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களிடம் சென்று திமுக ஆட்சியின் வளர்ச்சித் திட்டங்கள், அண்ணா நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் எதிர்கால வாக்குறுதிகள் குறித்து விளக்கி வாக்கு சேகரிக்கிறார். உதய சூரியன் சின்னத்தை சுட்டிக்காட்டி, “திமுகவினரே மக்களிடம் துணை நின்றது” என்று பேசி, பேரிடர் காலங்களில் திமுக அரசு முன்னின்று செயல்பட்டதை நினைவூட்டுகிறார். 

இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளின் நிலைமை தெரியுமா..? எடப்பாடிக்கு கனிமொழி எச்சரிக்கை..!!

இந்த நிலையில், சென்னை அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சிற்றரசை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். திமுக வேட்பாளர் சிற்றரசை குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இதையும் படிங்க: தேர்தல் நெருங்கியாச்சு..!! இபிஎஸ்க்கு இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share