தேர்தல் நெருங்கியாச்சு..!! இபிஎஸ்க்கு இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக கூட்டணியில் பல்வேறு கட்சிகளிடம் பிடித்துள்ளன. அவர்களுக்கு ஏற்றவாறு தொகுதி பங்கீடு சுமோகமாக பேசி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஜமாத் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தங்களது ஆதரவை கூறியுள்ளனர். தென்னிந்திய தர்காக்கள் மற்றும் மசூதிகள் சங்கம் உள்ளிட்டவை இந்த நிகழ்வில் பங்கேற்றன. பல்வேறு மூடப்பட்ட உருது பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் வக்புகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆதரவை கூறினர்.
இதையும் படிங்க: பச்சை பொய் பழனிச்சாமி..! நாக்கை அடக்குங்க..! கொந்தளித்த திமுக..!!
தேர்தல் நேரத்தில் இஸ்லாமிய அமைப்புகள் கொடுத்துள்ள இந்த ஆதரவு அதிமுகவிற்கு மேலும் பலத்தை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களில் இருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகளை தாண்டி இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத்துகள், இஸ்லாமிய சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அரசு அதிகாரிகளை மாற்றினால் திமுகவுக்கு என்ன கஷ்டம்.? இபிஎஸ் சரமாரி கேள்வி..!