×
 

"ஸ்டாலின் தொடரட்டும்"... "தமிழ்நாடு வெல்லட்டும்"... திமுகவின் பிரச்சார பாடல் வெளியீடு..!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவின் பிரச்சார பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் தனது பிரச்சாரத்தை சூடுபிடிக்கும் வகையில் ஒரு அதிகாரப்பூர்வ பிரச்சாரப் பாடலை வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் ‘ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது.

இது திமுகவின் 2026 தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. இந்தப் பாடல் திமுகவின் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் தலைமையை வலியுறுத்துகிறது. அதே நேரத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சியையும் முன்னிறுத்துகிறது. பாடலின் வரிகள் தமிழ்நாட்டைச் சிதைக்கும் வகையில் வடக்கிலிருந்து வரும் ‘பெரும் பருந்து’ போன்ற சக்திகளுக்கு எதிராக திமுகவின் போராட்ட வரலாற்றை நினைவூட்டுகின்றன.

தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கைகளைத் தொடர்ந்து, ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்தி திணிப்பு, நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, தேசிய கல்விக் கொள்கை, நிதிப் பகிர்வில் பாரபட்சம் போன்ற விவகாரங்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு, மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் திமுகவின் நிலைப்பாட்டை பாடல் எடுத்துக்காட்டுகிறது.

இதையும் படிங்க: எத்தன உருட்டு..? தேர்வு நடத்த கூட "வக்கற்ற திமுக அரசு"... விளாசிய அதிமுக..!

திமுகவின் இந்தப் பாடல் வெளியீடு, களப் பணியாளர்களைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. கட்சியின் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பூத் அளவிலான பணியாளர்களை ஒன்றிணைத்து, தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: 50 லட்சம் இளைஞர்களுக்கு ஜாக்பாட்... ஸ்டன் ஆன தேர்தல் களம்... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share