பச்சை பொய் பழனிச்சாமி..! நாக்கை அடக்குங்க..! கொந்தளித்த திமுக..!!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக ஐடி விங் கடுமையாக கண்டித்துள்ளது.
திமுக ஆட்சியின்போது கொரோனா வந்திருந்தால் முதலமைச்சரும் போயிருப்பார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது பரப்புரையின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் பேசும்போது, திமுக ஆட்சியில் வறட்சி வந்ததா, வெள்ளம் வந்ததா, கொரோனா வந்ததா என்று கேள்வி எழுப்பினார். அப்படியெல்லாம் வந்திருந்தால் இந்த முதலமைச்சர் காணாமல் போயிருப்பார் என்று கூறினார்.
இவரும் அந்த கொரோனாவில் போயிருப்பார் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பச்சை பொய் சொல்வதாகவும் நாவை அடக்கி பேச வேண்டும் என்றும் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதலமைச்சரைப் பற்றிப் பேச, பழனிசாமி உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வி எழுப்பியுள்ளது.
நேற்று தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பேசிவிட்டு, இன்று கண்டனங்கள் எழுந்தவுடன், நீங்கள் ஒரு 'பச்சை பொய்யர்' என்பதை நிரூபிக்கும் வகையில் மாற்றிப் பேசுகிறீர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எப்படி முதலமைச்சர் ஆனீர்கள் என்பது ஊர் அறிந்த ரகசியம் என்றும் மக்கள் ஆதரவால் அல்ல, சசிகலாவின் காலில் விழுந்து, மேசைக்கு அடியில் ஊர்ந்து சென்று பெற்ற 'தவழ்ந்து வந்த' பதவி அது எனவும் எடப்பாடி பழனிச்சாமியை சரமாரியாக திமுக சாடியுள்ளது.
இதையும் படிங்க: அரசு அதிகாரிகளை மாற்றினால் திமுகவுக்கு என்ன கஷ்டம்.? இபிஎஸ் சரமாரி கேள்வி..!
உங்கள் ஆட்சிக்காலம் முழுவதும் ஊழலில் திளைத்துவிட்டு, இன்று தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள டெல்லிக்கு அடிமையாகி, மோடியிடம் மண்டியிட்டுக் கிடக்கும் உங்களுக்கு, மக்கள் முதலமைச்சரைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை என்றும் இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு மரண அடியைக் கொடுக்கத் தயாராகிவிட்டார்கள். உங்கள் படுதோல்வி இப்போதே உறுதியாகிவிட்டது. எங்கள் தலைவரைப் பற்றி அவதூறு பேசியதற்கு, வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவது உறுதி என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இன்னும் அவர் கெட்ட வார்த்தைல தான் திட்டல..! " பால்டாயில் பழனிச்சாமி"..! கிண்டலடித்த உதயநிதி..!!