எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு!! கரெக்டா இருந்துக்கோங்க! கூட்டணி கட்சிகளிடம் பாய்ந்த CM விஜய்!!
எங்க கூட்டணியில் இருக்கீங்க.. அமைச்சர் பதவி எல்லாம் கொடுத்து இருக்கோம்.. ஆனால் எங்களையே விமர்சனம் செய்கிறீர்கள்.. என்று கூட்டணி கட்சியினரிடம் விஜய் கொதித்து போய் உள்ளார்.
சென்னை: சட்டசபையில் மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்து பேசியதற்கு கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்ததால் முதல்வர் விஜய் கொதிப்படைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபையில் உரையாற்றிய விஜய், “என்னை ரீல் ஹீரோவாக சித்தரிக்க முயல்கிறார்கள். இது ரீல் அல்ல, ரியல்” என்று கூறியிருந்தார். மேலும் ஸ்டாலின் போல ஆக்சன் செய்தும், “உங்கள் அப்பா எங்கே?” எனக் கேட்டும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சுக்கு கூட்டணியில் உள்ள சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
“சினிமா வேறு, ஆட்சி வேறு. சட்டசபையில் இப்படி பேசக் கூடாது. ஸ்டாலினை அவ்வளவு கிண்டல் செய்வது தவறு” என கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரடியாக விஜயிடம் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த விஜய், “எங்கள் கூட்டணியில் இருக்கிறீர்கள். அமைச்சர் பதவிகள் கொடுத்திருக்கிறோம். ஆனால் எங்களையே விமர்சனம் செய்கிறீர்களே?” எனக் கொதித்துப் போய் பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தவெகவில் இணைவும் விஜய பாஸ்கர்கள்!!! ஜூலையில் தேதி குறிச்சாச்சு!! அதிமுகவில் தொடரும் அதிருப்தி!
கோட்டை வட்டாரத்தில் பேசப்படும் தகவலின்படி, கூட்டணி கட்சிகளை நீண்ட காலம் முழுமையாக நம்ப முடியாது என விஜய் உணர்ந்துள்ளார். எனவே, தனி மெஜாரிட்டி பெறும் வகையில் இடைத்தேர்தல்களில் வலுவான உத்திகளை வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதிமுக எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இந்த சம்பவம் தற்போது ஆளும் கூட்டணிக்குள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் திமுகவை கடுமையாக எதிர்கொள்ளும் விஜய், மறுபுறம் தனது கூட்டணி கட்சிகளுடன் உரசலில் ஈடுபட்டுள்ளார். இது எதிர்கால அரசியல் சமன்பாட்டை எப்படி பாதிக்கும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல்வர் விஜய்யின் தலைமை மற்றும் அவரது நேரடி பேச்சு பாணி தமிழக அரசியலை புதிய திசையில் கொண்டு செல்கிறது என்பது உறுதி. ஆனால் கூட்டணி நிர்வாகம் எப்படி இருக்கும் என்பதே தற்போது பெரும் கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: ரூ.11,526 கோடி!!! திமுக ஆட்சியில் அரசு துறைகளில் பயன்படுத்தப்படாத பணம்!! கருவூலத்தில் ஒப்படைப்பு!