விறுவிறுப்பான தேர்தல் களம்... முதல்வர் தலைமையில் திமுக மா. செ கூட்டம்..!! முக்கிய விவாதம்..!!
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. பரபரப்பான நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது
இந்த பரபரப்பான சூழலில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக அதிமுக - பாஜக கூட்டணி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகளும் தனித்த அரசியல் முயற்சிகளுடன் களத்தில் செயற்பட்டு வருகின்றன. பெரிய கூட்டணியை உருவாக்கி திமுக முன்னணியில் இருப்பது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலில் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தாலியை அறுக்கும் கயவர்கள் ராஜ்ஜியம்..! செத்த பிணத்தின் முன் ஒப்பாரி... வளர்மதி விளாசல்..!!
பின்னர் அது மாற்றப்பட்டு மார்ச் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கியது. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்றுள்ள இந்தக் கூட்டத்தில் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்த துரைமுருகனும் கலந்து கொண்டுள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கள நிலவரம், தேர்தல் பிரச்சார வியூகங்கள், எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசியல் அணுகுமுறைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: காபந்து அரசு..! இனிமே NO..! அதிரடியாக அமலான விதிகள்..!!