×
 

தாலியை அறுக்கும் கயவர்கள் ராஜ்ஜியம்..! செத்த பிணத்தின் முன் ஒப்பாரி... வளர்மதி விளாசல்..!!

தாலியை அறுக்கும் கயவர்கள் ராஜ்ஜியம் நடப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் திமுக ஆட்சியில் அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. மீண்டும் திமுக ஆட்சி அமையக்கூடாது என்று எதிர்கட்சிகள் கூறி வருகின்றன.

பெண்களே இந்த இயக்கத்தின் ஆகச்சிறந்த பலம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேடைகளில் முழங்குவது, செத்த பிணத்தின் முன் பாடப்படும் ஒப்பாரி போலத் தான் ஒலிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி விமர்சனம் செய்துள்ளார். பெண்கள் என்றால் இந்த இயக்கத்திற்குப் ‘பயம்’ என்பதற்குப் பதிலாகப் ‘பலம்’ என்று வாய்தவறி வந்த சொல்லா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஒருபுறம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, மறுபுரம் பெண்களின் மாண்பையும் உயிரையும் பறிக்கும் கயவர்களுக்குப் புகலிடம் கொடுக்கும் இந்த விடியா அரசு, விளம்பர வெளிச்சத்தில் தனது கறைபடிந்த முகத்தை மறைக்கப் பார்க்கிறது என்றும் விமர்சித்துள்ளார். தாலிக்குத் தங்கம் கொடுத்த மண்ணில், இன்று தாலியை அறுக்கும் கயவர்களின் ராஜ்ஜியம் நடப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விறுவிறு அரசியல் களம்... நீடிக்கும் இழுபறி..! மார்ச் 16ல் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை...!!

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நச்சுப் பிடியில் சிக்கிச் சீரழியும் இளைஞர் கூட்டம், பெண்களைச் சதையாக மட்டுமே பார்க்கும் வக்கிரம் பெருகி வருவதற்கு இந்த அரசே முழு முதற் காரணம். சட்டத்தின் கைகளோ ஆளுங்கட்சியின் சட்டைப் பைக்குள் குற்றவாளிகளோ கொக்கரித்துத் திரிகிறார்கள் என்று தெரிவித்தார். குறித்து வைத்துக் கொள்ளுங்கள் ஸ்டாலின்., நீங்கள் 'பலம்' என்று கொண்டாடும் அதே பெண்களே, உங்கள் ஆட்சியைத் தகர்க்கும் 'பெரும் நெருப்பாக' மாறப் போகிறார்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க: ஒரு பக்கம் பாலியல் குற்றம்... மறுபக்கம் கஸ்டடி மரணம்..! தொகுதி பங்கீடு தான் முக்கியம்ல்ல? அதிமுக தாக்கு.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share