×
 

பணப்பட்டுவாடா செய்ய போட்டா போட்டி.! திமுக, அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்த நாதக வேட்பாளர்..!

ராஜபாளையத்தில் திமுக மற்றும் அதிமுகவினர் பண பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டை எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை முடித்து வேட்பாளர்களை அறிவித்தனர். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வந்தனர். திமுக, அதிமுக என் பல கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மிக தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். பிரச்சாரங்கள் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

பரிசுப் பொருட்கள் பணம் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சில இடங்களில் பரிசு டோக்கன்கள், கூப்பன்கள், பண பட்டுவாடா ஆகியவை நிகழ்கின்றன.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய சம்பவங்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பை இறுக்கமாக்கின. பணப் பரிவர்த்தனை, லஞ்சம், இலவசங்கள் வழங்குதல் போன்றவற்றைத் தடுக்க பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டன.  இதற்கிடையில், ராஜபாளையத்தில் திமுக மற்றும் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது. திமுக சார்பில் தங்கப்பாண்டியனும் அதிமுக சார்பில் பிரிசில்லா பாண்டியனும் களம் காண்கின்றனர்.

இதையும் படிங்க: பெண்கள் இடஒதுக்கீட்டை திமுக தடுத்து வருகிறது! சாத்தூரில் சந்திரபாபு நாயுடு அனல் பறக்கும் பேச்சு!

இந்த நிலையில் பண பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பண பட்டுவாடா செய்தவர்களை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கையும் களவுமாக பிடித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவி வருகின்றன ராம்நகர் பகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே போல் ஞானசம்பந்தர் தெருவில் திமுக நிர்வாகிகள் பணப்பட்டு வாடா செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதி என் செல்லக் குழந்தை..! மீண்டும் இதே தொகுதிக்கு வருவேன்.! சத்தியம் செய்த முதல்வர் ஸ்டாலின்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share