விறுவிறு தேர்தல்... 175 தொகுதிகளில் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டி..!!
திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் 175 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் தி.மு.க.வின் உதய சூரியன் சின்னம் மொத்தம் 175 தொகுதிகளில் போட்டியிடும் என்பது உறுதியாகியுள்ளது.
இது தி.மு.க.வின் நேரடி வேட்பாளர்கள் மற்றும் சில கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் உள்ளடக்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. தி.மு.க. கூட்டணி இதுவரை கிட்டத்தட்ட 66 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் சில தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் தங்களின் சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றன.
ஆனால் பெரும்பாலான கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்திலேயே வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர். இதன் காரணமாக உதய சூரியன் சின்னத்தில் மொத்தம் 175 தொகுதிகளில் போட்டி நடைபெறும் என தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வே நேரடியாக 164 முதல் 166 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை உதய சூரியன் சின்னத்தில் நிறுத்துகிறது.
இதையும் படிங்க: ஜாடிக்கு ஏத்த மூடி..! சிலிண்டர் தட்டுபாட்டால் சிக்கி தவிக்கும் மக்கள்... பாஜக, அதிமுகவை கிழித்த முதல்வர் ஸ்டாலின்..!!
கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்., இந்திய தேசிய காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5, ம.தி.மு.க.வுக்கு 4, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 2, கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2, விசிக 8 ஆகியவை முக்கியமானவை. இவற்றில் சில கட்சிகளின் வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர். இதனால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் மொத்த எண்ணிக்கை 175ஆக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தலைகீழாக மாறிய அரசியல் கணக்கு... திமுக Vs அதிமுக Vs தவெக ... அடுத்த முதல்வர் யார்? - வெளியானது முக்கிய கருத்துக்கணிப்பு...!