×
 

அதிகாரிகள் அலட்சியப்படுத்துறாங்க... நகர்மன்ற கூட்டத்தில் இருந்து கூட்டாக நடையைக் கட்டிய திமுக, அதிமுக கவுன்சிலர்கள்...!

முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பூட்டிய அறையில் நடத்தப்பட்ட ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் இருந்து திமுக, அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு.

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான கூட்டம் இன்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 23 கவுன்சிலர்களில் 17 பேர் மட்டுமே இந்த கவுன்சிலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் வழக்கமாக செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று கவுன்சிலர் கூட்டம் நடைபெறும் அரங்கில் செய்தி சேகரிக்கும் பணியில் இருந்த செய்தியாளர்களை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே கூட்ட அரங்கில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் அறையின் உள்பக்கம் தாழிட்டு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர், திமுக கவுன்சிலர்கள் 3 பேர் என 6 கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் முறையாக கணக்கு காண்பிப்பதில்லை எப்போது கேட்டாலும் மாவட்டத்தில் இருந்து இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை என கூறுகின்றார்கள். ஆனால் ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் அளவிற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நிதி ஒதுக்க ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்ட திமுக கவுன்சிலர்களுக்கு மட்டுமே மீண்டும் மீண்டும் பணி வழங்குவதாக கூறி வெளி நடப்பு செய்தனர்.

உண்மையாகவே நிதி ஒதுக்கப்படுகிறதா அல்லது நிதி ஒதுக்கப்படவில்லையா என்பது குறித்தும் ஒதுக்கப்பட்டு இருந்தால் யாருக்கு பணி வழங்கப்பட்டது என்பது குறித்தும் விளக்கம் தர வேண்டும் என அதிமுக பெண் கவுன்சில ரேவதி குற்றச்சாட்டியுள்ளார். 

இதையும் படிங்க: எல்லாம் அரசியல்... தட்டிவிடுங்க! வெளிநாட்டு பயணம் குறித்த விமர்சனத்திற்கு முதல்வர் பதிலடி

இந்த நிலையில் இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது ஏழு மாதங்களுக்கு மேலாகிறது இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. வரும் விதிக்கு அதிகமாகவே ஒப்பந்தங்கள் வைக்கப்படுவதால் வருகின்ற நிதி அனைத்தும் பழைய ஒப்பந்த புள்ளிகளுக்கு செலவிடப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து விழுப்புர மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதன் காரணமாக இன்று முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க: வரும் 10ம் தேதி வரைக்கும்தான் டைம்! மீண்டும் அன்புமணிக்கு கெடு விதித்த ராமதாஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share