உங்க விளக்கமே வினோதமா இருக்கு..! தொகுதி மறு வரையறை குறித்து ஆ.ராசா விளாசல்..!!
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் ஆ.ராசா உரையாற்றினார்.
தொகுதி மறு வரையறை மசோதாவிற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் பேசுகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடுமையாக இந்த மசோதாவால் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
நேற்று தமிழகத்தில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், மக்களவையில் தொகுதி மறு வரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆ.ராசா உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடாளுமன்றத்தை தவறாக வழி நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
தொகுதி மறு வரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். வடமாநிலங்கள் அதிக ஆதிக்கம் செலுத்தினால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என அம்பேத்கரே கூறி இருப்பதாகவும் சுட்டி காட்டினார். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த மசோதா தொடர்பாக பிரதமர் முரண்பாடாக பேசுகிறார் என்றும் தெரிவித்துள்ளார். தொகுதி மறு வரையறை மீதான விவாதத்தில் பிரதமரும் அமைத் ஷாவும் சம்பந்தம் இல்லாத வகையில் விளக்கம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை சட்டத்தை மொத்தமா திரும்பப் பெறனும்..! முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!
மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா பற்றி சம்பந்தமில்லாத வகையில் விளக்கம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தொகுதி மறு வரையறை மசோதா பற்றிய பிரதமர் மற்றும் அமைச்சர் விளக்கங்கள் மாறுபட்ட வகையில் வினோதமாக இருக்கிறது என்றும். பிரதமரும் உள்துறை அமைச்சரும் மசோதாவில் இல்லாததை விளக்கமாக தந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: டோக்கன்களை அதிமுகவினர் பதுக்கி வைத்ததாக புகார்..! போலீஸ் கண்முன்னே வெடித்த பிரச்சனை..!