முழு சங்கி இபிஎஸ்... பதறிப் போயிட்டாப்ல..! உதயநிதி விமர்சனம்..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முழு சங்கியாக மாறி உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது திமுகவினர் மதிகள் பேசிய அவர், பாஜக ஆட்சி என்பது பாசிச ஆட்சி, அதிமுக ஆட்சி என்பது அடிமை மாடல் ஆட்சி என கூறினார். பெண்கள் உயர் கல்வி பயில வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் புதுமைப்பெண் திட்டம் என்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவை திரும்பிப் பார்க்கிறது என்றும் விடுபட்டவர்களுக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் எனவும் கூறினார். அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அமித்ஷாவிடம் அதிமுக அடகு வைக்கப்பட்டுவிட்டது என்றும் அதிமுக - பாஜக கூட்டணியில் ஒற்றுமை இல்லாத சூழல் உள்ளது என்றும் தேர்தல்களில் திமுக முந்துவதால் ஈபிஎஸ்-க்கு பதற்றம் வந்துவிட்டது எனவும் கூறினார். முழுமையாக காவி சாயத்தோடு எடப்பாடி இருக்கிறார் என்றும் முழு சங்கியாக இபிஎஸ் மாறிவிட்டார் எனவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மக்களின் வீட்டு கதவுகளை உரிமையோடு தட்டுகிறது திமுக என தெரிவித்த அவர், ஓடி, ஒளிந்து சென்று பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்தவர் ஈபிஎஸ் என்றும் அடிமைகளையும் பாசிஸ்ட்களையும் தமிழக மக்கள் வீழ்த்துவார்கள் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், பூத் முகவர்கள் தான் கட்சியின் ரத்த நாளங்கள் என்றும் அரசின் திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் சில கட்சிகளில் இன்னும் பூத் ஏஜென்டே போட முடியாத நிலை உள்ளது எனக் கூறிய அவர், ஆனால் நாம் பூத் முகவர்கள் பயிற்சி கூட்டத்தையே மாநாடு போல் நடத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இபிஎஸ் 210 தொகுதி சொன்னா...நான் 220 சொல்லணுமா? உதயநிதி கலகல பேச்சு
இதையும் படிங்க: என்னைக்குமே DMK தான் மாஸ்! ஏன் தெரியுமா..? TKS சொன்ன சீக்ரெட்..!