×
 

இபிஎஸ் 210 தொகுதி சொன்னா...நான் 220 சொல்லணுமா? உதயநிதி கலகல பேச்சு

இபிஎஸ் 210 தொகுதிகள் எனக் கூறியதால் நான் 220 தொகுதிகள் என சொல்ல வேண்டுமா? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ள எடப்பாடி பழனிச்சாமி, மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் இந்தப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்த சுற்றுப்பயணம், 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியிடம் ஆட்சியை இழந்த பிறகு, மக்களிடையே மீண்டும் செல்வாக்கைப் பெறுவதற்கும், கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கும் முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகிறது. 

கோவையில் நடந்த இரண்டாம் நாள் பிரச்சாரத்தின் போது, பழனிச்சாமி, 2026 சட்டமன்ற தேர்தலில், பலம் வாய்ந்த கூட்டணி அமைத்து, 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெல்லும்., வீட்டு மக்களைப் பற்றியே சிந்திக்கும் கட்சி திமுக., நாட்டு மக்களை பற்றி சிந்திக்கும் கட்சி அதிமுக என தெரிவித்தார்.

இதையும் படிங்க: என்னைக்குமே DMK தான் மாஸ்! ஏன் தெரியுமா..? TKS சொன்ன சீக்ரெட்..!

50 மாத கால திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த புதிய திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வரவில்லை என்றும் அதிமுக பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் தான் மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சிகள் எனவும் கூறினார். இந்த நிலையில் 210 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் 210 தொகுதிகள் என கூறியதால் நான் என்ன 220 தொகுதிகள் என்று சொல்ல வேண்டுமா என கிண்டலாக கேள்வி எழுப்பினார். 210 தொகுதிகள் என்று அவர் சொல்லுவார்., ஆனால் முடிவெடுக்க போவது மக்கள்தான் எனக் கூறினார். எங்கள் பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்., மக்கள் நல்ல முடிவை தருவார்கள் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமூக நீதி பாதுகாவலர்.. கலைஞரின் அன்பு நண்பர் அவர்.. வி.பி.சிங் வரலாற்றை நினைவுக்கூர்ந்த உதயநிதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share