புழல் ஜெயில் வாசலிலிருந்து தவெக-வுக்கு மிரட்டல்..! திமுக கவுன்சிலர் சரவணன் கைது..!!
தவெக கட்சிக்கு மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் சரவணன் கைது செய்யப்பட்டார்.
புழல் மத்திய சிறைவாசலில் நடந்த ஒரு சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் கோடிக்கணக்கான லஞ்சம் பெற்றதாக எழுந்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது சிறை வாசலில் திமுக ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.
அந்தக் கூட்டத்தில் வேலூர் மாநகராட்சி 12வது வார்டு திமுக கவுன்சிலரும் அன்பில் மகேஷின் தீவிர ஆதரவாளருமான டீட்டா சரவணன் என்பவர் சர்ச்சைக்குரிய பேச்சைப் பேசினார். “கரூரிலேயே போட்டுருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது” என்று அவர் கூறியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. இந்தப் பேச்சு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு எதிரான மிரட்டலாகவும் கொலை மிரட்டலாகவும் கருதப்பட்டது.
கரூர் நெரிசல் சம்பவத்துடன் இணைத்துப் பேசிய இந்தக் குறிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோ வெளியானதும் புழல் காவல் நிலையத்தில் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொது அமைதியைக் குலைத்தல், மிரட்டல், பொது ஊழியர்களின் பணியைத் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு குறித்து திமுக பேசலாமா? குழந்தைகள் மாயமான தரவுகளை முன்வைத்து TVK கேள்வி..!
அவரைக் கைது செய்வதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்றது. கைதுக்குப் பயந்து அவர் தலைமறைவாகியிருந்தார். தேடுதல் நடவடிக்கை தொடர்ந்த நிலையில் விழுப்புரம் பகுதியில் அவர் மறைந்திருந்த தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அவரைக் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கரூர்லயே விஜய் கதையை முடிச்சிருக்கணும் தலைவரே! திமுக எம்.எல்.ஏ ஆவேசம்! போலீஸ் வலை!