×
 
☰

சட்டம் ஒழுங்கு குறித்து திமுக பேசலாமா? குழந்தைகள் மாயமான தரவுகளை முன்வைத்து TVK கேள்வி..!

திமுக ஆட்சி காலத்தில் காணாமல் போன குழந்தைகள் விவரங்களை தவெக ஐடி விங் பட்டியலிட்டு உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம், காணாமல் போன குழந்தைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி திமுக அரசின் ஆட்சிக்கால செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளது. கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016 முதல் 2025 வரையிலான பத்து ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பதிவான காணாமல் போன குழந்தைகள் வழக்குகள் மொத்தம் 22,209 ஆக இருந்தன.

அதே நேரத்தில் 2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டுகளில் இவ்வழக்குகளின் எண்ணிக்கை 37,705 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டில் மட்டும் 8,439 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, இந்தப் பத்து ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளில் 742 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மிகுந்த கவலைக்குரிய உண்மை என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.இதற்கு மாறாக, தமிழக வெற்றிக் கழகம் அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கட்சி கூறியுள்ளது.

கொலை வழக்குகளின் மாத சராசரி 131.9 இலிருந்து 128.5 ஆகக் குறைந்துள்ளது. கொலை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட 3,070 பேரில் 2,935 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் தொடர்பான கொலைகளின் எண்ணிக்கையும் 12 இலிருந்து 7 ஆகக் குறைந்துள்ளது. இவைதான் தரவுகள் வெளிப்படுத்தும் உண்மை என தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திமுகவை ஒன்றும் கிழிக்க முடியாது: விசாரணை முடிந்து வெளியே வந்த ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் ஆவேச பேட்டி!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கு முழுமையான தலைமைத்துவம் வழங்கப்படவில்லை எனவும், டிஜிபி பதவிக்கு கூட உரிய முறையில் நியமனம் செய்யப்படாமல் இருந்தது எனவும் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது. டம்மி டாடி ஆட்சியில் இத்தனை பிரச்சினைகளை வைத்துக்கொண்டு இன்று எந்த முகத்துடன் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குகிறீர்கள் என கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி மாநாட்டின் 2-ஆம் ஆண்டு நிறைவு: தவெக ஐடி விங் பெருமித அறிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share