ச்ச்சீ... இப்படியா நடந்துக்கிறது? போதை தலைக்கேறி ஆபாச நடனமாடிய திமுக கவுன்சிலர்... வைரலாகும் வீடியோ
கோவில் திருவிழாவின்போது போதை தலைக்கேறியதால் திமுக ஒன்றிய கவுன்சிலர் ஆபாச நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மகாகாளி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவிழாவில் ஒரு பகுதியாக கரகாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கரகாட்ட நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி மது போதையில் கரகாட்டம் ஆடிய பெண்ணுடன் ஆபாச நடனம் ம் ஆடியது காண்போரின் முகம் சுழிக்க வைத்தது.
கரகாட்டம் ஆடும் பெண்ணுடன், கையைப் பிடித்து நடனம் ஆடியதுடன் ஆபாசமாக நடந்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நிகழ்ச்சியை தலைமை தாங்கி எவ்வித பிரச்சினையும் இல்லாமல் முடித்து வைக்க வேண்டிய கடமை உணர்வு இருக்க வேண்டிய ஒன்றிய கவுன்சிலர் பொறுப்பில் இருப்பவர் போதையில் இதுபோல நடந்து கொண்டது முறையா என்றும் பல கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் மற்றும் திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்சியின் தலைமை இதுபோல நடந்து கொண்ட ஒன்றிய கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் முன் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மண்டையை உடைத்த திமுக பெண் கவுன்சிலர்... ராகு காலத்தில் புகார் எடுக்க மாட்டோம் என மறுத்த போலீஸ்!
சமீப காலமாக கோவில் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கரகாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் இடம்பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மழலைகள் முகத்தில் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே பார்க்கிறேன்! நெகிழ்ந்து பேசிய முதல்வர்