மழலைகள் முகத்தில் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே பார்க்கிறேன்! நெகிழ்ந்து பேசிய முதல்வர்
மழலைகள் முகத்தில் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே பார்ப்பதாக முதலமைச்ச ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தனர். பிறகு மாணவர்களுடன் அமர்ந்த முதல்வர்கள் உணவு அருந்தினர். காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து வைத்தது தொடர்பாக நெகிழ்ந்து கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், மழலை மாணவச் செல்வங்களின் முகங்களில், நான் காண்பது புன்னகையை மட்டும் கிடையாது என கூறினார்.
நம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே காண்பதாக தெரிவித்தார். உயிர் காக்கும் மருத்துவர்களாக, நல்லாசிரியர்களாக, கவிஞர்களாக, விளையாட்டு வீரர்களாக, அவர்கள் விரும்பும் எதுவாகவும் உயரப் போகும் வெற்றியாளர்களைக் காண்பதாக கூறினார்.
மாணவர்களின் வயிற்றுப் பசியைப் போக்குவது மட்டுமல்ல, அவர்களின் கனவுகள் நனவாகத் துணைநிற்பதும் என்னுடைய கடமை எனச் செயலாற்றி வருவதாகவும், ஒவ்வொரு காலையும், நம் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படும்போது, கடமையை நிறைவேற்றுவதற்கான உறுதி மேலும் வலுப்பெறுகிறது என்றும் மாணவர்களைப் பரிவுடன் கவனித்து, அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் ஊக்கம் பிறக்கிறது எனவும் முதல்வர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எல்லாம் சரி... தரமா இருக்கா முதல்வரே? காலை உணவு திட்டத்தை விமர்சித்த அதிமுக..!
இன்று தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்ட விரிவாக்கம் என்பது அனைத்துக் குழந்தைகளும் நெஞ்சில் நம்பிக்கையோடு வளரும், மேலும் வலிமையான, ஒளிமயமான தமிழ்நாட்டை கட்டியெழுப்புவதற்கான தனது உறுதிமொழி என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: களைப்பிற்கே இடமில்ல! இனி சுறுசுறுப்பு, புன்னகை, ஆர்வம் மட்டும் தான்.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!