×
 

“டெல்லியில் ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு!” - 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தீவிரம்!

டெல்லி சென்ற கனிமொழி! - ராகுல் காந்தியுடன் இன்று மிக முக்கியத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கானக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதன் ஒரு பகுதியாக, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் அக்கட்சியின் துணைப் பொது செயலாளருமான கனிமொழி கருணாநிதி அவர்கள், இன்று புது தில்லியில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி அவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

திமுக - காங்கிரஸ் இடையிலானத் தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இழுபறிக்குத் தீர்வு காண்பதே இந்தச் சந்திப்பின் மிக முக்கிய நோக்கமாகும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கானத் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் முட்டுக்கட்டைகளை உடைத்து, உடன்பாட்டை எட்டுவதற்காகத் திமுக தலைமையின் அதிகாரப்பூர்வத் தூதுவராகக் கனிமொழி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த முறை ஒதுக்கப்பட்ட 25 இடங்களை விட, இந்த முறை 35 முதல் 40 இடங்கள் வரை காங்கிரஸ் எதிர்பார்ப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், திமுக தலைமை சுமார் 27 முதல் 30 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் ஒரு பிரிவினர் ஆட்சியில் பங்கு  கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையில், அது குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: திமுக 2026 தேர்தல் அறிக்கை கூட்டம்: திருச்சியை இரண்டாம் தலைநகராக்க அமைச்சர்கள் கோரிக்கை!

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அவர்கள் கனிமொழியுடன் இது தொடர்பாகத் தொடர்பிலிருந்து வருகிறார். இன்றையச் சந்திப்பில் ஒரு இறுதி முடிவு எட்டப்படாவிட்டாலும், பேச்சுவார்த்தை ஒரு சரியான திசையை நோக்கி நகரும் என இரு தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதியக் கட்சிகளின் வரவால் தமிழக அரசியல் களம் மாறி வரும் சூழலில், தனது நீண்ட காலக் கூட்டணிக் கூட்டாளியான காங்கிரஸைப் அரவணைத்துச் செல்லத் திமுக இந்தத் தூதுத் திட்டத்தை வகுத்துள்ளது.

இதையும் படிங்க: இங்கிருப்பது ஸ்டாலின் படை! - கனிமொழி எம்.பி. அனல் பறக்கும் பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share