அரசியலில் திருப்புமுனை... திமுக கூட்டணியில் தேமுதிக...! ஒரே வார்த்தையில் முடிச்சிட்டாரு இபிஎஸ்..!!
திமுக கூட்டணிகள் தேமுதிக இணைந்திருப்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டு அரசியலில் தற்போது நடந்திருக்கும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று, தேமுதிக தேசிய முற்போக்கு திராவிட கழகம் முதன்முறையாக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருப்பது தான். இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே நடந்திருக்கும் இந்த முடிவு, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், கடந்த 2011 முதல் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து வந்தது. கேப்டன் விஜயகாந்த் காலத்திலிருந்தே அந்த உறவு தொடர்ந்து வந்தது.
ஆனால் இப்போது பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அந்தக் கட்சி திமுக பக்கம் திரும்பியிருப்பது, பின்னணியில் சில முக்கிய காரணங்களை வைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. இதில் பெரும்பாலானோர் ராஜ்யசபா சீட் தொடர்பான அதிருப்தியைத் தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இணைந்தபோது, தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா இடம் தருவதாக உறுதிமொழி அளிக்கப்பட்டதாக பிரேமலதா தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் 2025-ல் ராஜ்யசபா தேர்தல் வந்தபோது அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தட்டிக்கழித்து வந்தார். இது தேமுதிக உள்ளேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் பொதுவெளியிலும் இதை வெளிப்படையாக வெளியிட்டனர். அதிமுக தரப்பில் "நாங்கள் உறுதியளித்தது 2026-க்கு தான்" என்று சமாளித்தாலும், தேமுதிகவுக்கு அது போதுமான நம்பிக்கையைத் தரவில்லை.
இதையும் படிங்க: மணிப்பூரை பார்... வாய்ச்சவடால் விட்ட முதல்வர்... புள்ளி விவரத்தோடு விளாசிய பாஜக..!!
இதனால் தேமுதிகவுக்கு அதிமுக மீதான நம்பிக்கை குறைந்து போனது. கூட்டணி உறவில் தொடர்ந்து வரும் இத்தகைய சமரசமின்மை, கட்சியின் வளர்ச்சிக்கும், தலைமைக்கும் திருப்தி அளிக்காத நிலை உருவானது. மறுபக்கம் திமுக தரப்பில் பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதனிடையே இன்று திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து விட்டது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். திமுக கூட்டணிகள் தேமுதிக இணைந்தது குறித்து எடப்பாடி பழனிச்சாமி இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கூட்டணி முடிவு என்பது அந்தந்த கட்சிகள் எடுக்கும் முடிவு, சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களின் விருப்பம் என்று கருத்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறியா?... யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த தங்க தமிழ்ச்செல்வன்...!!