அம்புட்டும் நடிப்பு.. நீலி கண்ணீர் வடிக்காதீங்க இபிஎஸ்..! திமுக குற்றச்சாட்டு..!
உதை மின் திட்டத்தில் கையெழுத்து போட்டுவிட்டு மின் கட்டணம் உயர்ந்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி நீலி கண்ணீர் வடிக்கிறார் என திமுக விமர்சித்துள்ளது.
உதய் மின் திட்டம் (Ujwal DISCOM Assurance Yojana - UDAY) என்பது இந்திய அரசால் 2015 நவம்பரில் தொடங்கப்பட்ட மின் பகிர்மான நிறுவனங்களின் நிதி மற்றும் செயல்பாட்டு சீரமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டம்.
2016-ல் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு உதய் திட்டத்தில் இணைய முடிவு செய்தது.
2017 ஜனவரி 9-ல், தமிழ்நாடு உதய் திட்டத்தில் இணைந்தது, இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுதில்லியில் மத்திய மின் துறை இணையமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தமிழக மின் துறை அமைச்சர் பி. தங்கமணி முன்னிலையில் கையெழுத்தானது
இதையும் படிங்க: ஆவேசத்தில் முக்குலத்தோர் சமூகம்... எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!
எடப்பாடி பழனிச்சாமி அரசு இத்திட்டத்தில் இணைந்தது, மின் கட்டண உயர்வுக்கு வழிவகுத்ததாகவும், விவசாயிகளின் இலவச மின்சார உரிமைகளுக்கு மறைமுக ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் விமர்சிக்கப்பட்டது.
2024-ல், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு உதய் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் என குற்றம்சாட்டி இருந்தார்.
தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மின்கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவரது விமர்சனத்திற்கு திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்த பிறகு ஒடோடிப்போய் உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டு தமிழ்நாட்டை வஞ்சித்தது யார் என கேள்வி எழுப்பியுள்ளது.
அந்த காரியத்தை செய்தது சந்துகளில் இருந்து குரல் கொடுக்கும் ஷாக்க்ஷாத் பழனிசாமிதான் என்பது ஊருக்கே தெரிந்தபோதும் இன்று அவரே மின்கட்டணம் உயர்ந்துவிட்டது என நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: கீழடியை வெச்சு அரசியல் பண்றாங்க.. PERMISSION வாங்க வேண்டியது திமுக அரசு கடமை - இபிஎஸ்..!