கீழடியை வெச்சு அரசியல் பண்றாங்க.. PERMISSION வாங்க வேண்டியது திமுக அரசு கடமை - இபிஎஸ்..!
கீழடிக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் கடமை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கீழடி அருங்காட்சியகம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை ஆற்றங்கரையில் உள்ள கொந்தகை கிராமத்தில் அமைந்துள்ளது. இது 2023 மார்ச் 5 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கீழடி அருங்காட்சியகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தான் கீழடி அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
கீழடி அகழாய்வு அருங்காட்சியகத்தை உருவாக்கியது அதிமுக அரசு தான் என தெரிவித்தார். கீழடி என் தாய்மடி என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தது அதிமுக அரசியல் தான் என்றும் 2020இல் ஒய்எம்சிஏவில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் கீழடி கண்காட்சியை அதிமுக அரசு காட்சிப்படுத்தியதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்ல! போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த அஜித் வீட்டிற்கு சென்று இபிஎஸ் ஆறுதல்..!
39 அகழாய்வுகளில் 33 அகழாய்வு பணிகள் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது என்றும் 2018ல் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அமெரிக்காவுக்கு ஆய்வு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.
தொல்லியல் துறை அதிகாரியாக இருந்த உதயச்சந்திரன் தலைமையில் கீழடி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு கேட்டதற்காக சரியான விளக்கத்தை திமுக அரசு கொடுத்து தான் என தெரியவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றியது அதிமுக அரசியலமை என்றும் அகழாய்வில் கிடைத்த பொருட்களை உலகிற்கு காட்சிப்படுத்தினோம் என்றும் தெரிவித்தார்.
கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெறவேண்டியது திமுக அரசியல் கடமை என்றும் கீழடியை வைத்து அரசியல் செய்வதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள நிறைய கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
காலி பணியிடங்கள் இவ்வளவு இருக்கும்போது நிர்வாகம் எப்படி சிறப்பாக இருக்கும் என்ற கேள்வியையும் எடப்பாடி பழனிச்சாமி முன் வைத்தார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு லோன் தராதீங்க.. உத்தரவு போட்ட திமுக அமைச்சர்.. உண்மையை உடைத்த எடப்பாடி..!