×
 

மூட்டை மூட்டையாக பரிசு பொருட்கள்... திமுகவினரை கையும் களவுமாக பிடித்த தேர்தல் அதிகாரிகள்..!!

அரியலூரில் பரிசு பொருட்கள் வழங்கிய திமுகவினரை தேர்தல் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.

ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் நான்கு மூட்டை பாத்திரங்கள் மற்றும் புடவைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் திமுகவினரை கையும் களவுமாக தேர்தல் அதிகாரிகள் பிடித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலானது.

எனவே பரிசு பொருட்கள் வழங்குவது, பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. வாகனங்களில் ஒரே ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். எந்தவித தில்லு முல்லு வேலைகள் நடக்கக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக பாத்திரங்கள் மற்றும் புடவைகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தில் திமுக வார்டு செயலாளர் மணிவண்ணன் மற்றும் அன்பழகன் ஆகியோர் பொதுவெளியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு இலவச சில்வர் பாத்திரங்களை வழங்கிக் கொண்டிருந்தபோது தேர்தல் பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்து நான்கு மூட்டைகளில் இருந்த 279 சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: தமிழக அரசியலில் தலைகீழ் திருப்பம்... 42 கட்சிகளின் பதிவை  ரத்து செய்தது தேர்தல் ஆணையம்...!

அதேபோன்று ஜெயங்கொண்டத்தை அடுத்த செங்குந்தபுரம் கிராமத்தில் திமுக நகர அவைத் தலைவர் ஞானபிரகாசம் என்பவர் தனது வீட்டில் பொதுமக்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக வைத்திருந்த 14 சில்வர் பாத்திரங்கள் மற்றும் 12 சேலைகளை கைப்பற்றி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! 2 வாரங்களில் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்..?? தவெக மும்முரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share