தமிழக அரசியலில் தலைகீழ் திருப்பம்... 42 கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்...!
தமிழகத்தில் தேர்தலில் ஆறு ஆண்டுகள் போட்டியிடாத 42 அரசியல் கட்சிகளின் பதிவினை இந்திய தேர்தல் ஆணயம் ரத்து செய்துள்ளது.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள சூழ்நிலையில், தமிழக அரசியலில் அதிரடி மாற்றம் அரங்கேறியுள்ளது.
தேர்தலில் தொடர்ந்து போட்டியிடாத 42 அரசியல் கட்சிகளின் பதிவு அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணயம் ரத்து செய்துள்ளது. ஆறு ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் பங்கேற்காமல், வருடாந்திர கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 29A கீழ் எடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் சின்னம், வரிவிலக்கு, அதிகாரப்பூர்வ அங்கீகாரம் போன்ற சலுகைகள் இனி இந்த 42 கட்சிகளுக்கும் கிடைக்காது. இது தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9, 2025ல் 334 கட்சிகள் நீக்கம் செய்யப்பட்டன. செப்டம்பர் 18, 2025ல் மேலும் 474 கட்சிகள் நீக்கப்பட்டன. மொத்தம் 808 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசத்தில் 121 கட்சிகளும், மகாராஷ்டிராவில் 44 கட்சிகளும், தமிழகத்தில் 42 கட்சிகளும், புதுல்லியில் 40 கட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. இந்த நடவடிக்கையை எதிர்த்து சில கட்சிகள் நீதிமன்றத்தை நாடின. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட ஏழு கட்சிகள் மனுதாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்ததோடு இறுதி விசாரணையை மார்ச் இரண்டாவது வாரத்திற்கு ஒத்தி வைத்தது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! 2 வாரங்களில் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்..?? தவெக மும்முரம்..!!
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவுகளின் படி பார்த்தால், அரசியல் கட்சியுடைய பதிவை நீக்குவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணயத்திற்கு கிடையாது. மாறாக தன் வசமுள்ள அரசியல் கட்சிகளுடைய பட்டியலில் இருந்து கட்சிகளை தேர்தல் ஆணயம் நீக்கியுள்ளது. இதன் காரணமாக என்ன ஏற்படும் என்றால் அரசியல் கட்சிகள் நன்கொடைகள் வாங்கலாம். அவையெல்லாம் வருமான வரியிலிருந்து விலக்கு பெற்றவை. தற்போது இந்த கட்சிகளின் பதிவு நீக்கப்பட்டதால் இவற்றால் நன்கொடைகள் பெற முடியாது. அப்படி நன்கொடை வசூலித்தாலும் அவை வருமான வரிக்கு உட்படுத்தப்படும். இந்த தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு 20 நட்சத்திர பேச்சாளர்கள் மாநிலம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்வதற்கான உரிமை வழங்கப்படும். அத்தகைய அனுமதியை அவர்கள் பெறுவதற்கு இயலாது. அதேபோல மாநிலம் முழுவதும் பொதுச்சின்னம் பெற முடியாது.
இதையும் படிங்க: சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது..?? தலைமை தேர்தல் ஆணையர் பரபரப்பு பேட்டி..!!