×
 

COPY, PASTE அரசியல் அதிமுகவின் வாடிக்கை... இபிஎஸ்-ஐ பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்.!!

காப்பி, பேஸ்ட் அரசியல் அதிமுகவின் வாடிக்கை என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்தார்.

திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை முதலில் கொச்சைப்படுத்தினார்கள் என்றும் அது 'பூமராங்' ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள் எனவும் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

அ.தி.மு.க.வின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உதிர்த்து இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். பழனிசாமி அவர்களே, உங்கள் அழுத்தம் காரணமல்ல. "உங்கள் டெல்லி ஓனர்கள் தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம் என்று கூறினார். இதனைத் தெளிவாக விளக்கித்தான் சகோதரிகளின் கணக்கில் பணத்தை அட்வான்சாக வரவு வைத்ததாக கூறியுள்ளார்.

பரவாயில்லை, நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பதில் இருந்தே திராவிட மாடல் சத்தமில்லாமல் நடத்திய surgical strike உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய HIT அடித்துள்ளது எனப் புரிந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: கல்லாப்பெட்டி கூட்டணி... சொத்து விவரத்தை வெளியிட தயாரா? விஜய் கேள்வி..!!

Copy, paste அரசியல் என்பது காலங்காலமாக அ.தி.மு.க.வின் வாடிக்கை என்பதைத் தமிழ்நாட்டில் அனைவரும் அறிவார்கள் என்றும் அதனால், புதுசா ஏதாவது சொல்லுங்க எனவும் கூறினார். விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என இந்த மாடல் அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். எங்கள் DMK WOMEN பவர் எஞ்சின் முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது என்றும் கூறினார். 

இதையும் படிங்க: கரூர் விஷயத்தில் என்மேல ஏன் பழியை தூக்கி போட்டீங்க? முதல்வரை கேள்விகளால் துளைத்த விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share