"GET OUT RAVI"..! சட்டசபையை புறக்கணித்த ஆளுநர்..! எதற்கு இந்த பதவி? வலுக்கும் எதிர்ப்பு..!
காலனிய கால நடைமுறையான ஆளுநர் பதவியை மத்திய பாஜக ஒழித்துக்கட்டுமா என கேள்வி எழுப்பி உள்ளது.
ஆளுநர் உரையோடுதான் சட்டமன்றம் தொடங்கவேண்டும் என்பதை அரசியல் சட்டத்தில் மாற்ற முயல்வோம் என்று முதலமைச்சர் கூறியுள்ளதை திமுக சுட்டிக்காட்டியது. ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் சட்டமன்றத்துக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர்’ என்று தொடர்ச்சியாக நீதிமன்றத் தீர்ப்புகள் சுட்டிக்காட்டுகின்றன என்றும் அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் எண்ணமும் அதுதான் எனவும் தெரிவித்தார்.
அரசியல் சட்ட நிர்ணய சபை விவாதத்தில் 30.5.1949-ல் ‘ஆளுநர் என்ற பதவி, தேர்தல் மூலமாக நியமிக்க வேண்டுமா, நியமன முறையிலே நியமிக்கப்பட வேண்டுமா’ என்ற விவாதம் வந்தது என்றும் “ஆளுநர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன, நியமிக்கப்பட்டால் என்ன., அவர் ஒரு அலங்கார பதவியை வகிக்க போகிறார். அவருக்கென்று எந்த அதிகாரமும், அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்படவில்லை’’ என்றார் அண்ணல் அம்பேத்கர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் ‘ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை’ என்று அறிஞர் அண்ணா வலியுறுத்தினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1952 ஆம் ஆண்டு, சென்னை கவர்னராக ஒரு வடநாட்டுத் தலைவர் நியமிக்கப்பட்டதற்கு எதிராக கழகம் கடும் கண்டனங்களை பதிவு செய்தது என்றும் ‘வடநாட்டு ஆதிக்கம் கூடாது., கவர்னர் நியமனம் கூடாது., கவர்னர்களும் பொதுமக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்பதை வலியுறுத்தி அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கண்டன நாள் கூட்டங்களை நடத்தியதாகவும் தெரிவித்தது.
இதையும் படிங்க: வழக்கம்போல் LIVE CUT..! திமுக மிரண்டு போய் இருக்கு..! அதிமுக கடும் விமர்சனம்..!
ஆளுநர் பதவி என்பதே பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பதவிதான் என்றும் ‘இந்தியர்களுக்கு நிர்வாகத்தில் அனுபவமில்லை’ என்று கண்காணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பதவிதான் எனவும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்தபிறகும் எதற்கு இந்த ஆளுநர் பதவி எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. ‘காலனியகால எச்சங்களை அழிக்கிறோம்’ என்று குற்றவியல் சட்டங்களைத் திருத்தி பெயர்களை மாற்றும் மத்திய பா.ஜ.க அரசு, காலனிய கால நடைமுறையான ஆளுநர் பதவியையும் ஒழித்துக்கட்டுமா என கேள்வி எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: முரண்டு பிடிக்கும் ஆளுநர்... அவர் உரையே வேண்டாம்..! முதல்வர் ஸ்டாலின் காட்டம்..!