முரண்டு பிடிக்கும் ஆளுநர்... அவர் உரையே வேண்டாம்..! முதல்வர் ஸ்டாலின் காட்டம்..!
சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியின் நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மறுபடியும் ஆளுநர் உரை நிகழ்த்துவார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ரவி உரை நிகழ்த்தாமல் இருந்து வருகிறார். இந்த ஆண்டு உரை நிகழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தேசிய கீதம் பாடவில்லை எனக் கூறி ஆளுநர் வெளிநடப்பு செய்தார். தமிழக அரசு எழுதிக் கொடுத்த உரை தொடர்பாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
நான்காவது ஆண்டாக ஆளுநர் ரவி உரை நிகழ்த்தாதது திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் இதுபோல செய்து வருவது முறையல்ல என்றும் எல்லாம் மரபுப்படி தான் நடைபெறுகிறது என்றும் கூறி வருகின்றனர். ஆளுநர் ரவி உரை நிகழ்த்தாத நிலையில் அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
உரை நிகழ்த்தாமல் ஆளுநர் வெளியேறியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை’ என சட்டம் நிறைவேற்ற கோருவோம் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு தயாரித்தளித்த அறிக்கையை ஆளுநர் படிக்காமல் வெளியேறுவதால், திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளைப் பயன்பெறும் மக்களிடம் மறைத்துவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வரும் 24ம் தேதி வரை சட்டசபை நடைபெறும்... எல்லாமே மரபுப்படி தான் நடக்குது...! அப்பாவு பேட்டி..!
அரசியலமைப்புக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டப்பேரவைக்கும் மதிப்பளிக்காமல் மக்கள்நல நடவடிக்கைகளை முடக்கி வைத்து முரண்டு பிடிக்கும் தமிழ்நாடு ஆளுநரை அடக்கமற்ற ஆளுநர் என்று பத்திரிகையில் குறிப்பிட்ட இருந்ததை சுட்டிக்காட்டினார். அவரது இன்றைய செயல்பாடும் அதனை மெய்ப்பித்துள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போக்சோ வழக்கு... சட்டம் ஒழுங்கு சீர்கேடு..! சட்டசபை வளாகத்தில் இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு..!