×
 

ஜன.19ல் திமுக மகளிரணி மாநாடு... முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு... முக்கிய அறிவிப்பு...!

வரும் 19 ஆம் தேதி திமுக மகளிரணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி, கட்சியின் முக்கியமான சார்பு அணிகளில் ஒன்றாக விளங்குகிறது. திமுக 1949-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட போது, திராவிட இயக்கத்தின் அடிப்படையில் சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தியது. இந்த இயக்கத்தின் தொடர்ச்சியாக, பெண்களின் உரிமைகள் மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையில் மகளிரணி உருவாக்கப்பட்டது. திமுகவின் வரலாற்றில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, கல்வி வாய்ப்புகள், அரசியல் பங்களிப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் மகளிரணி முக்கிய பங்காற்றி வருகிறது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் மகளிர் மேம்ப்பாட்டுக்கென தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து, 1.31 கோடி மகளிருக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை''விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்', கல்வி கற்கும் மாணவிகளுக்கு 'புதுமைப் பெண் திட்டம்', வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான 'தோழி விடுதி', இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வகுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்,

 29.12.2025 அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், "பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ" என்று சொல்லத்தக்க வகையில், "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து மகளிரணி மாநாடு நடைபெற இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படிங்க: வலிக்குது சார். கதறிய ஆசிரியர்... இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது..!

இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 19.01.2026 திங்கட்கிழமை, மாலை 4.00 மணி அளவில், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .

இதையும் படிங்க: போராட்டம் நடக்குமா? முதல்வர் அறிவிப்பை பொறுத்தே எங்கள் முடிவு... ஜாக்டோ ஜியோ திட்டவட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share