×
 

"மகனே! இனிதான் சூதானமா இருக்கனும்..." கதிர் ஆனந்திற்கு அப்பா துரைமுருகன் கொடுத்த முக்கிய அட்வைஸ்...!

திமுக பொதுச் செயலாளரும் என் தந்தையுமான துரைமுருகன் கூறியுள்ள அறிவுரையை பின்பற்றுவேன்

தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியினை சிறப்பாக செயல்பட வேண்டுமென திமுக பொதுச் செயலாளரும் என் தந்தையுமான துரைமுருகன் கூறியுள்ள அறிவுரையை பின்பற்றுவேன்

வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி கதிர் ஆனந்துக்கு திமுகவின் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்

இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து ரயில் மூலம் காட்பாடிக்கு வருகை தந்த அவருக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து வழி நெடுகிளும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிங்க: " திட்டம் இருக்கு... பணமில்ல..." - தனது ஸ்டைலில் தக்ஃலைப் பதில் கொடுத்த துரைமுருகன்..!

அதனைத் தொடர்ந்து, காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து பெரியார் சிலை, விருதம்பட்டு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை  ஆகியவற்றிற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கூறுகையில், திமுகவில் நியமனம் என்பதை விட பொறுப்பு என்று தான் எண்ணுகிறேன். தலைவர் அவர்கள் எப்பொழுது கூறினாலும் கழகத்தில் பதவி என்பது கிடையாது பொறுப்பு என்றுதான் கூறுவார். எனவே எந்த பொறுப்புக்காக என்னை நியமித்து உள்ளார்களோ? அதனை இந்த தொகுதிகளில் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.

என்னை தேர்ந்தெடுத்த நாடாளுமன்றத்திலும் சிறப்பாக செயல்படுவேன். 234 தொகுதிகளிலும் தலைவருக்கு நன்கு பரீட்சமான தொகுதிகள். வியூகம் என்பது தலைவர் சொல்லக் கூடியது.

மக்கள் தலைவர் பக்கம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார்கள். கண்டிப்பாக 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவது உறுதி.

எனக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செயல்பட வேண்டும் என என்னுடைய தந்தையும் திமுகவினுடைய பொதுச் செயலாளரும் துரைமுருகன் தனக்கு அறிவுரை வழங்கியுள்ளார் . அதனை ஏற்று சிறப்பாக பணியாற்றுவேன் என கூறினார்.

இதையும் படிங்க: பரபரப்பு... திடீரென அமைச்சர் துரைமுருகன் வீட்டின் முன் குவிந்த சட்டக்கல்லூரி மாணவர்கள்... காரணம் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share