×
 

பரபரப்பு... திடீரென அமைச்சர் துரைமுருகன் வீட்டின் முன் குவிந்த சட்டக்கல்லூரி மாணவர்கள்... காரணம் என்ன?

தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியதை அடுத்து கலைந்து சென்றனர். 

 72 சட்ட,க்கல்லூரி மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்காதது குறித்து சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்த 50க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள். திடீரென அமைச்சர் வீட்டில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

காட்பாடியில் உள்ளது வேலூர் அரசு சட்டக் கல்லூரி இங்கு LLB இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களில் 72 பேரை கல்லூரி நீர்வாகம் தேர்வெழுத அனுமதிக்காத சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. 

இதனால் ஓராண்டு வீணாகி அடுத்த ஆண்டும் பயிலும் சூழல் உள்ளதாகவும். மேலும் கல்லூரியின் முதல்வர் உட்பட 4 பேராசிரியர்கள் மாணவர்களிடையே சாதி, மத வேறுபாடு பார்ப்பதாகவும் அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி அமைச்சர் இடத்தில் கோரிக்கை வைப்பதற்காக சுமார் 50 - க்கும் மேற்பட்ட அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீரென காட்பாடியில் உள்ள சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டின் முன்பு குவிந்தனர். இவர்களை அமைச்சர் துரைமுருகன் அழைத்து பேசினார்.

இதையும் படிங்க: எவ்ளோ சீரியஸான பிரச்னை தெரியுமா? பேப்பர்லாம் படிக்கிறீங்களா இல்லையா? சுப்ரீம் கோர்ட் டோஸ்!

தங்கள் பிரச்சனை குறித்து, அமைச்சர் துரைமுருகனிடம் தெரிவித்ததாகவும் இதற்கு அமைச்சர் சென்னையில் உள்ள அதிகாரிகளிடத்தில் பேசியதாகவும், 72 மாணவர்களும் தேர்வு எழுத உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் அமைச்சர் வீட்டில் இருந்து கலைந்து சென்றனர். 

இதையும் படிங்க: என்னை மன்னித்து விடுங்கள்… பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share