“இனிமேல் எல்லா கோயில்களிலும் இப்படித்தான்...” - திருச்செந்தூரில் நின்று கெத்தாக அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் சேகர்பாபு...!
திருச்செந்தூரில் இன்று நடைபெற்ற குடமுழுக்கு தான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
aqZதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் இன்று பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்ற இந்த குடமுழுக்கு ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம். திராவிட மாடல் ஆட்சியில் இப்படி ஒரு குடமுழுக்கு நடத்தக் கூடாது என்பதற்காக பல சட்ட போராட்டங்களை சந்தித்த இந்து சமய அறநிலைத்துறை இறுதியாக அறம் வெல்லும் என்ற கூற்றுக்கு ஏற்ப இன்று இலட்சோப லட்சம் மக்கள் கண்டு களித்த மிக சிறப்பாக குடமுழுக்கு நடைபெற்றது.
தமிழகத்தில் அனைத்து வசதிகள் கூடிய மொட்டை போடுவதற்கு மண்டபம், திருமணம் நடத்துவதற்கு மண்டபம், கழிப்பிட வசதி, நிர்வாகத்திற்கு உண்டான அலுவலக கட்டடங்கள் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பெருந்திட்ட வரைவு என்ற வார்த்தையை திராவிடமாடல் ஆட்சியில் தான் கேள்விப்பட்டிருப்பீர்கள், அந்த வகையில் 19 கோயில்களை கையில் எடுத்து முதல் கோயிலாக திருச்செந்தூர் திருக்கோயிலில் முழு வரைவு திட்டத்தின் கீழ் சிறப்பாக குடமுழுக்கு இன்று நடைபெற்றது.
இதையும் படிங்க: விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்.. திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்..!
மீதம் இருக்கும் இந்த பணிகளை ஆகஸ்ட் செப்டம்பர் மாதத்தில் முழுமை அடைய செய்வோம். பக்தர்கள் மனம் குளிர செய்வோம். தொடர்ந்து இனிமேல் எல்லா கோயில்களிலும் தமிழ் மொழியிலேயே குடமுழுக்கு மந்திரங்கள் முழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வயலூர் முருகன் கோயிலில் அனைத்து ஜாதிகளும் அர்ச்சகாரர்களாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரியார் அண்ணா கலைஞர் கனவுகளை நிறைவேற்றியுள்ளோம்.
மதுரை இந்து முன்னணி மாநாடு உண்மையான முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்கள் முருக பக்தர்களா அல்லது இன்று திருச்செந்தூரில் நடைபெற்றது முருக பக்தர்களா?, இன்று நடைபெற்றது தான் உண்மையான ஆன்மீக மாநாடு. அறம் சார்ந்த மாநாடு. யாரையும் அழிப்போம் ஒழிப்போம் என்று எங்கும் சொல்லவில்லை. அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதுதான் எங்களுடைய கூற்று. எங்களுடைய முதல்வர் எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் தாரகம்.
இந்த மேடையிலே பாடிய பாடல்கள் ஒலித்த மந்திரங்கள் எல்லாவுமே இறைவனுக்கு உதித்த மந்திரங்கள். வர்ணனையாளர்கள் கூட தமிழில் தான் பேசி கொண்டிருந்தார். நாங்கள் யாரையும் மேடை ஏறி திராவிடத்தை ஒழிப்போம் என்று கூறவில்லை. இன்று ஒலித்த மந்திரங்கள் அத்தனையும் அரோகரா முருகன் என்று தான் ஒலித்தது. இதுதான் ஆன்மீகத்திற்கான உண்மையான மாநாடு என்று எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: நாளை தொடங்குகிறது யாக சாலை பூஜை..! பக்தர்களுக்காக இவ்ளோ ஏற்பாடா!!