×
 

தவெக காய்ந்துப் போன சக்தி..! "ஓட்டு போட்டவங்களே FEEL என்ன பண்றாங்க"... ஸ்டாலின் விமர்சனம்..!!

தீர்ந்து போன சக்தி என கூறியவர்களிடமே திருடுபவர்கள் எவ்வளவு காய்ந்து போன சக்தி என ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பாசிசம் பாயாசம் என நக்கல் செய்த முதல்வர் விஜய் டெல்லி போய் என்ன செய்தார் என்று கேட்டுள்ளார். ஆறு மாதம் கூட விமர்சனம் செய்யாமல் இருக்கும்படி ஆட்சி நடக்குமா? என்றுதான் பேசியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் உண்மைக்கு மாறாக திரித்து ஆட்சியை கவிழ்க்க சரியா என்று பேசினார்கள் என்றும் குறிப்பிட்டார். பொறுப்பான எதிர்க்கட்சியாக திமுக தொடர்ந்து செயல்படும் என்றும் உறுதியளித்தார். சென்னை மற்றும் பல பகுதிகளை மின்வெட்டு மூழ்கடிப்பதாக தெரிவித்துள்ள அவர், தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்தவர்களும் வாக்களிக்காதவர்களும் வருத்தப்பட்டு வருவதாக கூறினார்.

தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் கொடூரமான குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும் கூறியுள்ளார். முதலமைச்சருக்கு அவரது ஆட்சி மீது அவருக்கு நம்பிக்கை இல்லையா என்று கேட்டுள்ளார் பாஜக பல மாநிலங்களை செய்வதை தமிழகத்தில் விஜய் செய்து கொண்டிருக்கிறதாக தெரிவித்துள்ளார். தங்கள் கூட்டணி கட்சியினர் மீது விஜய்க்கு நம்பிக்கை இல்லையா என்றும் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

கையில் வைத்த மை காயம் உன்னை ராஜினாமா செய்யும் அளவுக்கு என்ன ஆஃபர் கிடைத்தது என்றும் சரமாரி விமர்சனங்களை முன் வைத்தார். நம்பிக்கையாக இருங்கள் என்று கூறும் முதலமைச்சர் விஜய் முதலில் நம்பிக்கையாக இருக்கிறாரா என்று கேட்டார். தீர்ந்து போன சக்தி என கூறியவர்களிடமே திருடுபவர்கள் எவ்வளவு காய்ந்து போன சக்தி என்று கேட்டார். தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் ஆளுங்கட்சியை சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share