பொன்முடிக்கு மீண்டும் கட்சிப் பதவி... நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளும் திமுக...!
திமுகவிற்கு கூடுதலாக 2 துணைப் பொதுச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2025-ஆம் ஆண்டில் கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.
கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சிகளின் முக்கிய பகுதியாக, அவர் திமுக நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
கட்சியின் அமைப்புகள் மற்றும் நிர்வாக மாற்றங்களையும் மேற்கொண்டு வருகிறார். 2026ல் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது. திமுகவின் துணை பொதுச் செயலாளர்கள் கட்சியின் பலவீனமான பகுதிகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றனர், குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சி அமைப்பை விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பெண்கள் பாதுகாப்பில் சமரசமே இல்ல.. பாஜகவின் வழக்கம் தெரியுமா? திமுக திட்டவட்டம்...!
கனிமொழி, ஐ. பெரியசாமி உட்பட 5 பேர் திமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்தனர். ஏற்கனவே ஐந்து பேர் உள்ள நிலையில், பொன்முடி, சாமிநாதன் கூடுதலாக துணை பொதுச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். திமுக துணை பொது செயலாளர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. சைவம் வைணவம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததால் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அங்க மட்டும் சும்மாவா? அதிமுகவிலும் குடும்ப அரசியல் தான்... முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பகிரங்க குற்றச்சாட்டு...!