×
 

ஆளும் திறனற்ற திமுக... திட்டக்குடி விபத்தை சுட்டிக்காட்டி கண்டித்த நயினார்..!

ஆளும் திறனற்ற திமுக என்று திட்டக்குடி விபத்தை சுட்டிக்காட்ட நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே எழுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. இந்த சோக சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் (SETC) பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.

இதனால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். பேருந்து சாலையின் நடுத்தடுப்பைத் தாண்டி எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதியது. இந்த மோதலின் விசையால் கார்கள் பலத்த சேதமடைந்தன. இரண்டு கார்களிலும் பயணம் செய்தவர்களே பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்த ஒன்பது பேரில் ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் அடங்குவர். 

 இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த இரு மாதங்களில், இதுபோன்ற பெரு விபத்து நடைபெறுவது நான்காவது முறை என்றும் பலமுறை வலியுறுத்தியும் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததே இம்மாதிரியான விபத்துகளுக்குக் காரணம் எனவும் ஆளும் திறனற்ற திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக மதவெறியால் ஒரு உயிரே போச்சு... எறிவது தீபத்தூண் அல்ல தமிழர்கள்... நயினார் கண்டனம்...!

அரசுப் பேருந்துகளின் மேற்கூரை சேதமடைந்து மழைநீர் ஒழுகுவது, பயன்படுத்த முடியாத படிகளுடன் பேருந்துகளை ஓட்டுவது, பேருந்துகளே இல்லாமல் பயணிகள் அவதியுறுவது என அலட்சியத்துடன் பொதுமக்கள் உயிரில் விளையாடும் திமுக அரசின் மீது கடுங்கோபத்தில் உள்ள தமிழக மக்கள் திமுகவை ஆட்சி அரியணையிலிருந்து இறக்காமல் விட மாட்டார்கள் என்று கூறினார். 

இதையும் படிங்க: திட்டக்குடி துயரச் சம்பவம்... உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share